இன்பத்திலும், துன்பத்திலும் இணைந்திருக்கும் வயதில் முதிர்ந்த தம்பதியர் இன்பத்திலும், துன்பத்திலும் இணைந்திருக்கும் வயதில் முதிர்ந்த தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : கடவுளின் பிரமாணிக்கத்தை பிரதிபலிக்க...

தம்பதியர் ஒவ்வொருவரும், அடுத்தவருக்கு, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று சொன்ன ஆண்டவரின் அருகாமையை வெளிப்படுத்தும் அடையாளமாக இருக்கின்றார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் இறுதிப் பிரிவில், திருமணம், மற்றும் குடும்பத்தின் ஆன்மீகம் என்பதை மையக்கருத்தாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார். இப்பிரிவில், தம்பதியரிடையே, ஒருவரையொருவர் சார்ந்தும், அதேவேளையில் சுதந்திரமாகவும் நிலவும் அன்பின் ஆன்மீகத்தைப் பற்றி, 319ம் பத்தியில் கூறியுள்ள எண்ணங்களின் தொகுப்பு இதோ:

  • ஒருவருக்கொருவர் முற்றிலும் சொந்தமாகும் அனுபவத்தை வழங்குவது திருமணம். தம்பதியர், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து, இருவரும் இணைந்து முதுமை அடைவதன் வழியாக, கடவுளின் பிரமாணிக்கத்தை தங்கள் வாழ்வில் பிரதிபலிக்கின்றனர்… அன்பு செலுத்துவதில் காட்டப்படும் இந்த பிரமாணிக்கம், சட்டங்களுக்கு கட்டுப்பட்டதாக இருந்தால், அது, ஆன்மீக அளவில் அர்த்தமற்று போகும். அத்தகைய பிரமாணிக்கம், ஆண்டவர் மட்டுமே காணும் இதயத்தைச் சார்ந்த ஒரு விடயம்.
  • ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும், அன்று என்ன நடந்தாலும், நாம் எடுத்த முடிவில் உறுதியாக இருப்போம் என்று கடவுளுக்கு முன் உறுதியளிக்கிறோம். இரவு உறங்கச்செல்லும் முன்பு, இறைவனின் உதவியை நம்பி, அடுத்தநாள் துணிவுமிக்க இச்செயலைத் தொடர்ந்து ஆற்றும் நம்பிக்கை கொள்கிறோம். இவ்வழியே, தம்பதியர் ஒவ்வொருவரும், அடுத்தவருக்கு, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று சொன்ன ஆண்டவரின் அருகாமையை வெளிப்படுத்தும் அடையாளமாக இருக்கின்றார். (அன்பின் மகிழ்வு 319)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2021, 13:54