குடும்பவாழ்வின் ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சி குடும்பவாழ்வின் ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சி 

மகிழ்வின் மந்திரம் : குடும்பவாழ்வின் ஆன்மீகம்

"திருமண வாழ்வு, மற்றும் குடும்ப வாழ்வு ஆகியவற்றின் குறிப்பிட்டச் சூழல்களுக்கு ஏற்ப, பொதுநிலையினரின் ஆன்மீகம் உருவாகிறது" - இரண்டாவது வத்திக்கான் பொதுச்சங்கம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருமண உறவையும், குடும்ப வாழ்வையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் இறுதிப் பிரிவான 9ம் பிரிவு, முந்தைய 8 பிரிவுகளைக் காட்டிலும் குறுகியது. 313 முதல், 325 முடிய உள்ள 13 பத்திகளில், திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் நிலவும் ஆன்மீகத்தின் ஒரு சில பரிமாணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பொதுநிலையினருக்கே உரிய குடும்ப ஆன்மீகத்தின் பண்புகளைக் குறிப்பிடும். இப்பிரிவை, 313ம் பத்தியில் திருத்தந்தை இவ்வாறு அறிமுகம் செய்துவைக்கிறார்:

நாம் எத்தகைய வாழ்வு நிலைக்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைப் பொருத்து, பிறரன்பு என்ற புண்ணியம், பல்வேறு வண்ணங்களைப் பெறுகிறது. பொதுநிலையினரின் திருத்தூதுப்பணியைக் குறித்து, பல ஆண்டுகளுக்கு முன் பேசியுள்ள இரண்டாவது வத்திக்கான் பொதுச்சங்கம், குடும்பவாழ்வின் வழியே பிறக்கும் ஆன்மீகத்தை வலியுறுத்தியுள்ளது. "திருமண வாழ்வு, மற்றும் குடும்ப வாழ்வு ஆகியவற்றின் குறிப்பிட்டச் சூழல்களுக்கு ஏற்ப, பொதுநிலையினரின் ஆன்மீகம் உருவாகிறது" என்று பொதுச்சங்கம் கூறியுள்ளது. குடும்ப வாழ்விலும், அதன் உறவுகளிலும் வெளிப்படும் இந்த ஆன்மீகத்தின் குறிப்பிட்ட, அடிப்படையான பண்புகளை விவரிப்பது, தகுந்ததொரு முயற்சி. (அன்பின் மகிழ்வு 313)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2021, 14:08