தேடுதல்

அ.பணி ஜெரி ரொசாரியோ சே.ச. அ.பணி ஜெரி ரொசாரியோ சே.ச.  

நேர்காணல்: உறுப்பு தானம் - இறந்த பின்னும் வாழலாமே

சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு, எலும்பின் மஜ்ஜை, உயிரணுக்கள், தலைமுடி போன்ற உடல் உறுப்புக்கள் தானமாகத் தரக்கூடியவை

மேரி தெரேசா: வத்திக்கான்

'உடல் உறுப்பு தானம்' என்பது, ஒருவர் தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாயிலில் நிற்கும் மற்றொருவருக்கு, தானாக மனமுவந்து வழங்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகும். இந்த தானங்களிலும், ஒருவர் உயிருடன் இருக்கும்போது தருவது, இறந்த பின்னர் தருவது என இரு வகைகள் உள்ளன. உயிருடன் இருக்கும்போது, சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு, எலும்பின் மஜ்ஜை, உயிரணுக்கள், தலைமுடி போன்ற உடல் உறுப்புக்கள் தானமாகத் தரக்கூடியவை. ஒருவர் இறந்தபின், முழு உடலையுமே தானம் செய்யலாம். இந்தியாவில், தமிழகத்திலே உடல் உறுப்புகளைத் தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 1393 பேர், 7891 உறுப்புக்களைத் தானம் செய்துள்ளனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. சென்னையில் வாழ்ந்துவரும் இயேசு சபை அருள்பணி ஜெரி ரொசாரியோ அவர்கள், தானம் என்ற இயக்கத்தை நிறுவி, உடல் உறுப்புகள் தானத்தை பல ஆண்டுகளாக ஊக்குவித்து வருகிறார். இவரே 200க்கும் மேற்பட்ட தடவைகள் இரத்த தானம் செய்துள்ளார். அருள்பணி ஜெரி ரொசாரியோ அவர்கள், மதுரை இயேசு சபையினரின் லொயோலா வெப் டிவி வழியாக, ஒருவர் வாழ்ந்த பின்னும் வாழலாமே என்ற தலைப்பில், உடல் உறுப்பு தானங்கள் பற்றிப் பேசியுள்ளார். இவர், ஓர் இறையியலாளர், மேய்ப்பர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், மற்றும், வழக்கறிஞர் ஆவார்

உறுப்பு தானம் - இறந்த பின்னும் வாழலாமே – அ.பணி ஜெரி ரொசாரியோ சே.ச.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2021, 14:21