நேர்காணல்: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் அற்புதங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இறைமகன் இயேசுவின் பிறப்பு, அவரது வருகையை அறிவித்த திருமுழுக்கு யோவானின் பிறப்பு, அன்னை மரியாவின் பிறப்பு ஆகிய மூன்றுமே கத்தோலிக்கத் திருஅவையில், விழாக்களாகச் சிறப்பிக்கப்படுகின்றன செப்டம்பர் 08, இப்புதனன்று, அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பிக்கப்பட்டது. இந்த விழா, உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்தரும் ஆரோக்கிய அன்னை விழாவாகவும், தஞ்சாவூர் மறைமாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி, சென்னை பெசன்ட் நகர் உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழா, இப்புதனன்று வேளாங்கண்ணியில், பொதுமக்களின் பங்கேற்பின்றி, ஆனால் ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்பட்டது என்று, அருள்பணி ஆன்டோ ஜேசுராஜ் அவர்கள் கூறியுள்ளார். இவர், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலய திருப்பயணிகள் நிர்வாகி ஆவார். அருள்பணி ஆன்டோ ஜேசுராஜ் அவர்கள், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயம் பற்றியும், அந்த அன்னையின் பரிந்துரையால் நடைபெற்ற அற்புதம் பற்றி இன்று வழங்குகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்