நைஜீரியாவில் கடத்தல்கள் நைஜீரியாவில் கடத்தல்கள் 

போராளிகள் தன்னாட்சி கேட்பதற்கு திறமையற்ற நிர்வாகமே காரணம்

நைஜீரியாவில், கைதுசெய்யப்பட்டுள்ள, தன்னாட்சி கேட்டுப் போராடியவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், அவர்கள் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் – ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளிச் சிறார் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது, இளைய தலைமுறைகளை அதிர்ச்சியூட்டும் நிலைக்கு உள்ளாக்கும் ஆபத்தை எதிர்கொள்கிறோம் என்று, அந்நாட்டு ஆயர்கள் அரசுக்கு, எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

செப்டம்பர் 01, இப்புதனன்று, நைஜீரியாவின் வடமேற்கேயுள்ள, Zamfara மாநிலத்தின் Kaya என்ற கிராமத்திலிருந்து, 73 உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கடத்தப்பட்டிருப்பது குறித்து, செப்டம்பர் 02, இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், பள்ளிச் சிறாரும், மற்றவரும் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது, சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது என்று, கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டு மே மாதத்தில் கடத்தப்பட்ட மூன்று குழுக்கள், பிணையல்தொகை வழங்கப்பட்டபின்னரே விடுவிக்கப்பட்டனர் எனவும், அது நடந்து சில நாள்களிலேயே, 73 பள்ளிச் சிறார் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

நைஜீரியாவில், மனித வாழ்வு இவ்வளவு கேவலமானதாக இதற்குமுன் கருதப்படவில்லை எனவும், அந்நாட்டில் வன்முறை பரவலாக இடம்பெற்று வருகிறது எனவும் கூறியுள்ள ஆயர்கள், வட நைஜீரியாவில், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர், பள்ளிகளிலிருந்து கடத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  

வாக்குமாறாத கடவுள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், இந்த நம்பிக்கையின்றி நம்மால் முன்னோக்கி நடக்க இயலாது என்று, மக்களை ஊக்கப்படுத்தியுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2021, 13:50