கரகோஷ் அன்னை மரியா கரகோஷ் அன்னை மரியா  

ஈராக்கில் கிறிஸ்தவர்களின் நிலங்கள் ஒப்படைக்கப்பட

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டில், ஈராக்கிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை, Muqtada al Sadr அவர்கள், நல்மனதோடு வரவேற்றார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக்கில், கிறிஸ்தவர்களிடமிருந்து, சட்டத்திற்குப்புறம்பே திருடப்பட்ட வீடுகளும், நிலங்களும் திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கு, Muqtada al Sadr என்ற இயக்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மை ஆண்டுகளில், கிறிஸ்தவர்கள், மற்றும், Mandaean இன மக்கள் ஆகியோரிடமிருந்து, தனியாட்கள், அல்லது, திட்டமிட்ட குழுக்கள், திருடியுள்ள எண்பதுக்கு மேற்பட்ட சொத்துக்களை, Muqtada al Sadr இயக்கம், உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைத்துள்ளது.

ஈராக் ஷியா மதப் பிரிவுத் தலைவராகிய Muqtada al Sadr அவர்களின் முயற்சியின் பயனாக, அண்மையில், பாக்தாத் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள், மற்றும், Mandaean இன மக்கள், தங்களுக்கு சட்டமுறைப்படி சொந்தமான இடங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர் என்று, ஆகஸ்ட் 25, இப்புதனன்று, ஈராக்கில் வெளியான செய்திகள் கூறியுள்ளன.

இந்த நடவடிக்கை பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், Muqtada al Sadr இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட, மற்றவர்களால், அநீதிகளை எதிர்கொண்ட, கிறிஸ்தவர்கள் மற்றும், Mandaean இன மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், மற்றும், அந்நாட்டில் இடம்பெறும் உரிமை மீறல்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டில், ஈராக்கிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை, Muqtada al Sadr அவர்கள், நல்மனதோடு வரவேற்றார் என்பதும், ஈராக் அரசியலில் நிலையான தன்மை உருவாக, மிகச் சிறப்பான பங்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2021, 15:25