பெருந்தொற்று காலத்தில் இந்திய மாணவர்கள் பெருந்தொற்று காலத்தில் இந்திய மாணவர்கள்  

அரசு நிதியுதவியின்றியே, கிறிஸ்தவப் பள்ளிகளின் இலவசக்கல்வி

கிறிஸ்தவ பள்ளிகளில் குறைவான ஏழை மாணவர்களே உள்ளனர் என ஒருபுறமும், கிறிஸ்தவ பள்ளிகள், ஏழைமாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கி மதம் மாற்றுகின்றன்றன என மறுபுறமும் அரசே கூறுவது முரண்பாடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறுபான்மை மதத்தவரின் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அகற்றப்பட்டு, அரசு கல்வித்திட்டத்தின் கீழ் அவை கொண்டுவரப்படவேண்டும் என, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த இந்திய தேசிய ஆணையத்தின் பரிந்துரையைப்பற்றி, தன் கருத்தை வெளியிட்டுள்ளது, இந்திய ஆயர் பேரவை.

இந்திய சிறுபான்மையினரின் கல்வி நிலையங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதையடுத்து, இந்திய ஆயர் பேரவையின் கருத்துக்களை வெளியிட்ட, அதன் அதிகாரப்பூர்வப் பேச்சாளர், அருள்பணி Babu Joseph அவர்கள், அவ்வறிக்கையில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள், 8.76 விழுக்காட்டு மாணவர்களே, சமூக அளவிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள் என இவ்வறிக்கைக் கூறும் அதேவேளையில், கிறிஸ்தவ கல்வி நிலையங்கள், இலவசக்கல்வி வழியாக, ஏழைகளை தங்கள் மத்த்திற்கு இழுக்க முயல்கின்றனர் என்று அரசு தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, முரண்பாடானதாக உள்ளது என்றார் அருள்பணி பாபு ஜோசப்.

கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள், 74 விழுக்காட்டினர் கிறிஸ்தவரல்லாதவர்கள் என்பதால், இப்பள்ளியை அரசின் திட்டத்தின் கீழ் கொணரவேண்டும் என தேசிய ஆணையம் பரிந்துரைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர், இந்திய மக்கள்தொகையில் 2.3 விழுக்காடாக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இருக்கும்போது, பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பது, இயல்பான ஒன்றே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும், கல்வியை, அரசு வழங்கவேண்டிய கடமை இருக்க, கத்தோலிக்க நிறுவனங்கள் அரசின் நிதியுதவியைப் பெறாமலேயே, கல்வியை வழங்கிவருவது, அதிலும் பல இடங்களில், இலவசக் கல்வியை வழங்கிவருவது, அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட வேண்டுமேயொழிய, குறைகூறி ஒடுக்கப்படக்கூடாது என மேலும் எடுத்துரைத்தார், அருள்பணி பாபு ஜோசப்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2021, 15:28