இந்தியாவில் ஆப்கான் பெண்களுக்கு ஆதரவாக பேரணி இந்தியாவில் ஆப்கான் பெண்களுக்கு ஆதரவாக பேரணி  

பிரான்செஸ்கோ பொருளாதாரம், ஆப்கான் பெண்களுக்கு ஆதரவு

ஆப்கானில், தாலிபான்கள் ஆட்சியைக் கையிலெடுத்துள்ளதைத் தொடர்ந்து. தங்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்படும் என்று, அந்நாட்டுப் பெண்களும், சிறுமிகளும், அஞ்சுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அந்நாட்டு பெண்களின் நிலையை உலகினருக்கு உணர்த்தும் நோக்கத்தில், உலக அளவில் பேரணி ஒன்றை நடத்துவதற்கு, ‘பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்’ என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது.

ஆகஸ்ட் 28, வருகிற சனிக்கிழமையன்று, உலக அளவில் நடைபெறவிருக்கும் பேரணியில் அனைவரும் பங்குகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ள அந்த அமைப்பு, ஆப்கான் நாட்டின் பதட்டநிலை, மற்றும், நிச்சயமற்றதன்மையால் பெண்கள் எதிர்கொள்ளும் துயரங்களை எடுத்துரைக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆப்கானில், தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தங்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்படும் என்று அச்சமுறும் அந்நாட்டுப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும், நன்மனம் கொண்ட அனைவரும் ஆதரவாக இருக்குமாறு, பிரான்செஸ்கோவின் பொருளாதாரம் என்ற அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

உலகே, எங்களின் குரலைக் கேட்கின்றாயா?, இவ்வுலகினின்று எங்களை காணாமல்போகச் செய்யாதே!, எங்கள் குரலுக்கு ஆதரவளி, ஆப்கான் பெண்கள் உயிர்வாழ்கின்றனர் என்று, பேரணியில் பங்குகொள்ளும் அனைவரும், அப்பெண்களோடு இணைந்து குரலெழுப்புமாறு, அந்த அமைப்பு, தன் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கேட்டுக்கொண்டுள்ளது.

வருகிற சனிக்கிழமையன்று, அனைவரும் தங்கள் கரங்கள் மற்றும் வீட்டுச் சன்னல்களில் ஒரு சிறு நீல நிறத்துணியைக் கட்டியிருக்குமாறும், அந்த அமைப்பு கூறியுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2021, 14:48