ஆப்ரிக்காவின் புலம்பெயர்ந்தோர் - கோப்புப் படம் 2019 ஆப்ரிக்காவின் புலம்பெயர்ந்தோர் - கோப்புப் படம் 2019 

பெருந்தொற்றால் ஆஸ்திரேலியாவில் துன்புறும் புலம்பெயர்ந்தோர்

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி புகுந்துள்ள மக்களுள் 55 விழுக்காட்டினர் இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், தங்குமிடங்களின்றி துயருற்றுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடும் மக்கள், அண்மைய கோவிட் பெருந்தொற்று காலத்தில் தங்குமிடங்களின்றியும், போதிய நிதி வசதிகளின்றியும் வாடுவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புலம்பெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் இயேசு சபையினரின் JRS உதவி அமைப்பும், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ள நிலையில், போதிய வேலைவாய்ப்புகள் இன்றி துன்புறும், அடைக்கலம் தேடும் மக்களுக்கு தொடர்ந்த ஒரு வருமானத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டியதுள்ளது JRS அமைப்பு.

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி புகுந்துள்ள மக்களுள் 55 விழுக்காட்டினர் இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், தங்குமிடங்களின்மையால் துன்புறுவதாக அறிவித்துள்ளனர். பெருந்தொற்று கால வேலை இழப்புக்கள் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், 36 விழுக்காடு புலம்பெயர்ந்தோர், வீட்டு வாடகையை கட்டமுடியாமலும், 34 விழுக்காட்டினர் மின்சார கட்டணத்தை செலுத்தமுடியாமலும், கடந்த 3 மாதங்களில் 45 விழுக்காட்டினர் உணவு பற்றாக்குறையால் அவதியுற்றதாகவும், JRS நடத்திய ஆய்வுகள் வழி தெரிய வந்துள்ளது.

அடைக்கலம் தேடிவரும் மக்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பல்வேறு துன்ப நிலைகளை அடைந்துவந்தாலும், இந்த கோவிட் காலத்தில் அவர்களின் துன்பம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் உதவி அமைப்பான JRS கவலையை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2021, 15:13