வீட்டில் தன் மகனுக்கு கணிதம் கற்பிக்கும் தந்தை வீட்டில் தன் மகனுக்கு கணிதம் கற்பிக்கும் தந்தை 

மகிழ்வின் மந்திரம் : நம் குழந்தைகள் எங்குள்ளார்கள்?

குழந்தைகளின் நன்னெறி வளர்ச்சி, நல்லதை நோக்கியோ, அல்லது தீயதை நோக்கியோ செல்வதில், பெற்றோரின் பாதிப்பு, முக்கிய பங்கு வகிக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 7ம் பிரிவிற்கு, "குழந்தைகளின் மேன்மைமிகு கல்வியை நோக்கி", என தலைப்பிட்டு, குழந்தைகள் பெறக்கூடிய, பெறவேண்டிய கல்வியைப்பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெளிவாக விளக்கியுள்ளார். இப்பிரிவின் முதல் இரண்டு பத்திகளின் சுருக்கம் இதோ :

குழந்தைகளின் நன்னெறி வளர்ச்சி நல்லதை நோக்கியோ, கெட்டதை நோக்கியோ செல்வதில்  பெற்றோரின் பாதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டு, அதை உணர்வுபூர்வமாக, ஆர்வத்துடன், நியாயமான முறையில் நிறைவேற்றவேண்டும். குடும்பங்களின் கல்விப் பங்களிப்பு, மிகவும் முக்கியமானது, மற்றும், சிக்கலானது என்பதால், நான் அதை விரிவாக விவாதிக்க விரும்புகிறேன். நம் குழந்தைகள் எங்குள்ளார்கள்?

ஆதரவு மற்றும், வழிகாட்டுதலின் இடங்களாக குடும்பங்கள் இருப்பதால், அவைகள் தங்கள் வழிமுறைகள் குறித்து மறுபரிசீலனை செய்து, புதிய ஆதாரங்களைக் கண்டறிய வேண்டியது அவசியம். யார் குழந்தைகளுக்கு பொழுதுபோக்குகளை வழங்குகிறார்கள், தொலைக்காட்சி மற்றும், மின்னணு சாதனங்கள் வழியாக எத்தரத்தினர் அவர்களின் அறைகளுக்குள் நுழைகிறார்கள், யாருடன் அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதில் பெற்றோர் அக்கறை காட்டவேண்டும். அக்கறையுடன் எளிமையான வழியில், முக்கியமான விடயங்களைப் பேசி, அவர்களுடைய நேரத்தைச் செலவிட ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிந்து, நம் குழந்தைகளுக்காக நாம் நேரத்தை ஒதுக்கினால் மட்டுமே, நாம் அவர்களைத் தீங்கிலிருந்து பாதுகாக்க முடியும். விழிப்புணர்வு எப்போதும் அவசியம், அதேவேளை, புறக்கணிப்பு ஒருபோதும் பயனளிக்காது. ஆபத்தை எதிர்கொள்ள குழந்தைகள், மற்றும் இளம்பருவத்தினரைத் தயார் செய்ய பெற்றோர்கள் உதவவேண்டும், எடுத்துக்காட்டாக, வன்தாக்கம், அத்துமீறல், போதை பழக்கம் போன்றவைகளில்.(அன்பின் மகிழ்வு  259,260)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2021, 12:43