நைஜீரியாவின் வன்முறையில் சிக்கியுள்ள குழந்தைகள் நைஜீரியாவின் வன்முறையில் சிக்கியுள்ள குழந்தைகள் 

நைஜீரியாவில் ஒரு நாளைக்கு 17 கிறிஸ்தவர்கள் கொலை

ஆப்ரிக்காவின் நைஜீரியாவில், இவ்வாண்டின் முதல் 200 நாட்களில் மட்டும், இஸ்லாமிய குழுக்கள், மற்றும், ஆதரவாளர்களால், 3,462 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்காவின் நைஜீரியாவில், இவ்வாண்டின் முதல் 200 நாட்களில் மட்டும், 3,462 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

3,462 கிறிஸ்தவர்கள் இவ்வாண்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது, ஒரு நாளைக்கு, 17 பேர் கொல்லப்பட்டுள்ள விகிதத்தைக் காண்பிக்கிறது என உரைக்கும், மக்கள் விடுதலை, மற்றும் சட்டத்தின் ஆட்சி என்ற, அனைத்துலக கண்காணிப்பு அமைப்பு, இவ்வாண்டு சனவரி முதல் தேதிக்கும், ஜூலை 18ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்ட, 10 கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகளின் அருள்பணியாளர்களும் இதில் அடங்குவர் என தெரிவித்துள்ளது.

நைஜீரியா நாட்டில், 2014ம் ஆண்டில், 5000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதே மிகப்பெரும் எண்ணிக்கையாக கணிக்கப்பட்டுள்ளது, அதற்கு அடுத்தபடியாக, கடந்த ஆண்டில் 3530 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2014ம் ஆண்டில், 4000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களைக் கொலைசெய்துள்ளது, Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு.

490 கிறிஸ்தவர்களின் மரணத்திற்கு நைஜீரிய காவல்துறை, மற்றும் இராணுவத்தின் பல பிரிவுகளும் காரணமாகியுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில், இதுவரை, 2980 கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டள்ளதாகவும், இதில் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம், எனவும் அஞ்சப்படுகிறது.

150 மரணங்கள் வரை, வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இந்த மனித விடுதலை, மற்றும் சட்டத்தின் ஆட்சி என்ற அனைத்துலக  கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2021, 14:16