இத்தாலியில் கோவிட் கால திருமணம் இத்தாலியில் கோவிட் கால திருமணம் 

மகிழ்வின் மந்திரம் - புதியவர்களுக்கு பழையவர்களின் ஆன்மீக உதவி

குடும்ப ஆன்மீகம், இறைவேண்டல், ஞாயிறு திருப்பலி பங்கேற்பு, ஆன்மீக வாழ்வை மேம்மடுத்தும் சந்திப்புகள் என அனைத்தும் புதுமண தம்பதியரில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 6ம் பிரிவில், புது தம்பதியர்களுக்கு உதவும் மனித வளங்கள் எவை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ள 8 பத்திகளில், முதல் பத்தியான 223ல் கூறும் கருத்துக்களின் சுருக்கம்:

புதுமணத் தம்பதியரின் முதல் சில ஆண்டுகள் முக்கியத்துவம் நிறைந்தவை, ஏனெனில், அப்போதுதான் அவர்கள் சவால்களையும், திருமண வாழ்வின் அர்த்தத்தையும் கூடுதலாக அறிய வருகின்றனர். ஆகவே, திருமணம் எனும் அருளடையாளக் கொண்டாட்டத்தைத் தாண்டி, மேய்ப்புப்பணி சார்ந்த உடன்பயணித்தல் தேவையாகிறது. இப்பணியில், அனுபவம் மிக்க பழைய தம்பதியர் உதவமுடியும். திருஅவையின் புதிய அமைப்புக்கள், குழூமங்கள், இயக்கங்கள் வழியாக அனுபவம் மிக்கத் தம்பதியர், புதியவர்களுக்கு உதவலாம். குழந்தைகள் எனும் மிகப்பெரிய கொடையை திறந்தமனதுடன் வரவேற்பவர்களாகச் செயல்பட, அவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும். குடும்ப ஆன்மீகம், இறைவேண்டல், ஞாயிறு திருப்பலி பங்கேற்பு, ஆன்மீக வாழ்வை மேம்மடுத்தும் சந்திப்புகள் என, அனைத்தும், புதுமண தம்பதியரில் ஊக்குவிக்கப்படவேண்டும். அவர்களது ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்காகவும், வாழ்வின் ஆழமான தேவைகளின்போது அவர்கள் கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும், இது இருக்க வேண்டும். குடும்பங்களுக்காக நிறைவேற்றப்படும் திருவழிபாடுகள், பக்தி முயற்சிகள், திருப்பலிகள், குறிப்பாக, திருமண ஆண்டுக் கொண்டாட்டங்களின்போது இடம்பெறுபவை, போன்றவை, குடும்பங்கள் வழியாக நற்செய்தி அறிவித்தலை ஊக்கமளிக்கும் உயிர்துடிப்புடைய கூறுகளாகக் குறிப்பிடலாம். (அன்பின் மகிழ்வு 223)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2021, 14:12