குடும்பத்திற்கு ஆதரவாக, திருஅவையின் மேய்ப்புப்பணிகள் குடும்பத்திற்கு ஆதரவாக, திருஅவையின் மேய்ப்புப்பணிகள் 

மகிழ்வின் மந்திரம் : 'அன்பின் மகிழ்வு' 6ம் பிரிவு - அறிமுகம்

திருமண வாழ்வில் ஈடுபட விழையும் இளையோருக்கென, ஆற்றக்கூடிய மேய்ப்புப்பணிகளில் துவங்கி, உறவுகளை இழந்தோருக்கு ஆறுதல் வழங்கும் மேய்ப்புப்பணிகள் முடிய, பல்வேறு நிலைகளில், திருஅவையின் ஈடுபாடு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 6ம் பிரிவுக்குள் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம். "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 6ம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்கள், 60 பத்திகளில் (199-258) பதிவாகியுள்ளன. 76 பத்திகளைக் கொண்ட நான்காவது பிரிவுக்கு அடுத்தபடியாக, 60 பத்திகளைக் கொண்ட ஆறாவது பிரிவு, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது நீண்ட பிரிவாக அமைந்துள்ளது. இப்பிரிவில், கத்தோலிக்கச் சமுதாயம், எவ்வாறு, பல்வேறு நிலைகளில், குடும்பப்பணியில் ஈடுபடமுடியும், மற்றும், ஈடுபடவேண்டும் என்பதை, திருத்தந்தை விளக்கிக் கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள விழையும் இளையோரைத் தயாரித்தல்,

திருமண வாழ்வின் முதல் சில ஆண்டுகளில், தம்பதியரோடு உடன்பயணித்தல்,

திருமண வாழ்வில் ஏற்படும் துயர்நிறை நிகழ்வுகளை, குறிப்பாக, மணமுறிவு என்ற துயரத்தை எதிர்கொள்ள உதவுதல்,

வாழ்க்கைத் துணையையோ, அல்லது குடும்பத்தில் ஓர் உறவையோ இழந்தோருக்கும், தங்கள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்போருக்கும் உதவிசெய்தல், என்ற பல்வேறு வழிகளில், திருஅவை ஆற்றக்கூடிய, மற்றும், ஆற்றவேண்டிய மேய்ப்புப்பணிகள் இப்பிரிவில் கூறப்பட்டுள்ளன.

திருமண வாழ்வில் ஈடுபட விழையும் இளையோருக்கென, மறைமாவட்ட அளவில், பங்கு அளவில், ஆற்றக்கூடிய மேய்ப்புப்பணிகளில் துவங்கி, உறவுகளை இழந்தோருக்கு ஆறுதல் வழங்கும் மேய்ப்புப்பணிகள் முடிய, பல்வேறு நிலைகளில், என்னென்ன செய்யஇயலும், என்பதையும், என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அறிவுசார்ந்த எண்ணங்களாக, சவால்களாக இப்பிரிவில் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2021, 14:22