மகிழ்வான இந்தியக் குடும்பம் மகிழ்வான இந்தியக் குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: பெரிய குடும்பத்தின் கடமைகள்

தம்பதியரின் அனைத்து உறவினர்கள், போட்டியாளர்களாக, அச்சுறுத்துகின்றவர்களாக, அல்லது, வேற்று நபர்களாக நோக்கப்படக் கூடாது

மேரி தெரேசா: வத்திக்கான் 

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “அன்பு, கனிகள் நிறைந்து திகழ” என்ற தலைப்பில் அமைந்துள்ள ஐந்தாம் பிரிவு, “ஒரு பெரிய இதயம் (A big heart)” என்ற துணத்தலைப்போடு (பத்திகள்:196,197,198) நிறைவுபெறுகிறது. இதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்...

அளவோடு பிள்ளைகளைக்கொண்டு வாழும் ஒரு சிறிய குடும்பத்தோடு, பெரியதொரு குடும்பமும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உண்மையில், பெற்றோர், பிள்ளைகளுக்கிடையே, சகோதரர்கள், சகோதரிகளுக்கு இடையே, உறவினர் மற்றும், குடும்பத்தைச் சார்ந்தவர்களிடையே என்று, ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களிடையே  நிலவும் அன்பு, தம்பதியருக்கு வாழ்வை வழங்குகிறது, மற்றும், குடும்பத்தை மிக ஆழமான ஒன்றிப்பில் அமைக்க உதவுகிறது. நண்பர்களும், மற்ற குடும்பங்களும், இந்த பெரிய குடும்பத்தின் அங்கங்கள். இவர்கள், பெரிய குடும்பத்தின் துயர்களில், சமூக அர்ப்பணங்களில், மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கையில் ஆதரவாக இருக்கின்றனர். இளம் அன்னையர், பிள்ளைகள் இல்லாத பெற்றோர், ஒற்றை அன்னையர், குறிப்பிட்ட பாசமும் அருகாமையும் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், போதைப்பொருளுக்கு அடிமையான இளையோர், திருமணமாகாதவர், கணவர் அல்லது மனைவியை இழந்தவர்கள், பிரிந்து வாழும் தம்பதியர், வயதுமுதிர்ந்தோர், தங்கள் பிள்ளைகளின் ஆதரவின்றி கைவிடப்படும் நோயாளிகள், தங்கள் வாழ்வை அழித்துக்கொண்டவர்கள், வன்முறை, மற்றும், உரிமை மீறல்களாலும் துன்புறும் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் திறனற்று இருக்கும் பெற்றோர் போன்ற அனைவருக்கும் இந்த பெரிய குடும்பம், அன்பும், ஆதரவும் அளிக்கவேண்டும். இறுதியாக, இந்த பெரிய குடும்பத்தில், மாமனார்கள், மாமியார்கள், மற்றும், தம்பதியரின் அனைத்து உறவினர்களும் உள்ளடங்குவர் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. இந்த உறவினர்கள், போட்டியாளர்களாக, அச்சுறுத்துகின்றவர்களாக, அல்லது, வேற்று நபர்களாக நோக்கப்படக் கூடாது. இது திருமண அன்பின் சிறப்பான ஓர் அம்சம். தம்பதியரின் நியாயமான அந்தரங்கம், மற்றும் சுதந்திரம் காக்கப்படும் அதேவேளை, திருமண வாழ்வு, அதன் மரபுகள், மற்றும், பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சித்து, அவற்றைப் போற்றி மதிக்குமாறு வலியுறுத்துகிறது. இவ்வாறு செய்வதற்கு விருப்பமாக இருப்பது, தம்பதியர், ஒருவர் மீது கொண்டிருக்கும் தாராளமிக்க அன்பை மிக அழகான முறையில் வெளிப்படுத்துவதாக இருக்கும் (அன்பின் மகிழ்வு 196,197,198)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2021, 13:26