மாணவர்களோடு, முன்னாள்  குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாணவர்களோடு, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 

நேர்காணல்: இந்திய கத்தோலிக்கப் பள்ளிகளின் பணிகள், சவால்கள்

பிரான்ஸ் நாட்டு மறைப்பணியாளரான இறை ஊழியர் அருள்பணி ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள், 1853ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, கோயம்புத்தூர் பிரான்சிஸ்குவின் காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையை நிறுவினார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்சகோதரி மார்ட்டீனா அல்போன்சா மேரி அவர்கள், புனித பிரான்சிஸ்குவின் காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையைச் சார்ந்தவர். இவர், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், திருஅவை சட்டத்தில், முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். இந்திய கத்தோலிக்கப் பள்ளிகளின் பணிகளும், சவால்களும் என்ற தலைப்பில், புனித பிரான்சிஸ்குவின் காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையின் கல்வி வளர்ச்சி, பயன்பாடு மற்றும், எதார்த்தங்கள் என்பது, இச்சகோதரி முனைவர் பட்ட ஆய்வுக்கென தெரிவுசெய்த தலைப்பாகும். பிரான்ஸ் நாட்டு மறைப்பணியாளரான இறை ஊழியர் அருள்பணி ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்கள், 1853ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, கோயம்புத்தூர் பிரான்சிஸ்குவின் காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையை நிறுவினார். இச்சபை சகோதரிகள், இன்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், இத்தாலி, பிரான்ஸ், சாம்பியா, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் மறைப்பணியாற்றி வருகின்றனர்.

இந்திய கத்தோலிக்கப் பள்ளிகளின் பணிகள், சவால்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2021, 14:43