இறைஊழியர் மைக்கேல் அன்சால்தோ இறைஊழியர் மைக்கேல் அன்சால்தோ 

நேர்காணல்: இறைஊழியர் மைக்கேல் அன்சால்தோ

பிரான்சிஸ்குவின் புனித அலாய்சியஸ் கொன்சாகா கன்னியர் சபை, 1735ம் ஆண்டு ஒரு கருணை இல்லமாகத் துவக்கப்பட்டது. இச்சபையை, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், 1886ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிரான்சிஸ்குவின் புனித அலாய்சியஸ் கொன்சாகா கன்னியர் சபை, 1735ம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஒரு கருணை இல்லமாகத் துவக்கப்பட்டு, நாளடைவில் அது பக்தி சபையாக உருமாறி, 1858ம் ஆண்டில் புனித பிரான்சிஸ்குவின் மூன்றாம் சபையோடு இணைக்கப்பட்டது. ஆன்மீக, மற்றும், பணி வாழ்வில் சிறந்து விளங்கிய இச்சபையை, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், 1886ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக ஒரு  துறவு சபையாக அங்கீகரித்தார். இச்சபை, 1996ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதியன்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால், திருத்தந்தையின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஒரு துறவு சபையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கன்னியர் சபையை தோற்றுவித்த, இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர் மைக்கேல் அன்சால்தோ அவர்களை, அருளாளர் மற்றும், புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு, மறைமாவட்ட அளவில் தயாரிப்புப் பணிகள் இவ்வாண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய நம் நிகழ்ச்சியில், பிரான்சிஸ்குவின் புனித அலாய்சியஸ் கொன்சாகா கன்னியர் சபையின் தோற்றம், மற்றும், இறைஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார், அருள்சகோதரி லீமா ரோஸ் செல்வநாதன். பிரான்சிஸ்குவின் புனித அலாய்சியஸ் கொன்சாகா கன்னியர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி லீமா ரோஸ் அவர்கள், உரோம், இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

நேர்காணல்: இறைஊழியர் மைக்கேல் அன்சால்தோ

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2021, 14:59