டியானன்மென் நினைவுநாளைக் கடைபிடிக்க கூடியிருந்த ஹாங்காக் மக்கள் டியானன்மென் நினைவுநாளைக் கடைபிடிக்க கூடியிருந்த ஹாங்காக் மக்கள் 

டியானன்மென் நினைவு திருப்பலி

1989ம் ஆண்டு சூன் 4ம் தேதி சீனாவின் டியானன்மென் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள், நீதி, சுதந்திரம், அமைதியான சமுதாயம் ஆகியவற்றை உருவாக்குவதற்காகப் போராடியவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

32 ஆண்டுகளுக்குமுன், பெய்ஜிங் நகரின் டியானன்மென் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள், நீதி மற்றும், அமைதியான சமுதாயம் உருவாக்கப்படுவதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள் என்று, ஹாங்காக் முன்னாள் ஆயர், கர்தினால் ஜோசப் சென் (Joseph Zen) அவர்கள் கூறினார்.

1989ம் ஆண்டு, சூன் 4ம் தேதி, டியானன்மென் வளாகத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக, சூன் 04, இவ்வெள்ளி மாலையில், ஹாங்காக்கின் பல்வேறு ஆலயங்களில் நினைவு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இந்நினைவுநாளில், காவல்துறையின்  கட்டுப்பாடுகளையும் மீறி, விக்டோரியா பூங்காவுக்கு வெளியே, ஏராளமான மக்கள் மெழுகுதிரிகளை ஏற்றி வைத்தனர்.

ஹங்காக்கின் புனித அந்திரேயா ஆலயத்தில், திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் சென் அவர்கள், வாழ்வில், உண்மை நசுக்கப்படும்போது, நம்பிக்கைக்காகப் போராடுவது மிகப்பெரிய அளவில் துன்பத்தைக் கொணரும் என்று கூறினார். 

32 ஆண்டுகளுக்குமுன் கொல்லப்பட்டவர்களை நாம் நினைவுகூரும் இந்நாளில், நம்பிக்கையற்ற வாழ்வைப் புறக்கணிப்போம், மற்றும், ஏமாற்றம் அடையாமல் இருப்போம் என்று, தன் மறையுரையில் கேட்டுக்கொண்ட கர்தினால் சென் அவர்கள், நீதி மற்றும், அமைதியின் பாதையில் நாம் நடக்க ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2021, 15:38