செபமாலை பக்திமுயற்சி செபமாலை பக்திமுயற்சி 

நேர்காணல்: செபமாலை பக்திமுயற்சியின் வரலாறு பகுதி 2

மே 21, இவ்வெள்ளியன்று, ஜப்பானின் நாகசாகி அமல அன்னை பேராலயத்தில், அனைத்து சமுதாயநலப் பணியாளர்களுக்காகச் செபமாலை பக்திமுயற்சி நடைபெறுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், குறிப்பாக, இவ்வாண்டு இந்த மே மாதத்தில், உலகெங்கும் மக்களை வாட்டிக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று முற்றிலும் ஒழியும்படி உலகின் முப்பது முக்கிய அன்னை மரியா திருத்தலங்களில் செபமாலை பக்திமுயற்சி நடைபெற்று வருகிறது. மே 20, இவ்வியாழனன்று, கியூபா நாட்டு சந்தியாகு தெ கியூபா என்ற நகரில் அமைந்துள்ள எல் கோப்ரே பிறரன்பு அன்னை மரியா பெருங்கோவிலில் நடைபெற்ற செபமாலை பக்திமுயற்சி, மருந்துகளை விநியோகிப்பவர்கள் மற்றும், மருத்துவப் பணியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மே 21, இவ்வெள்ளியன்று, ஜப்பானின் நாகசாகி அமல அன்னை பேராலயத்தில், அனைத்து சமுதாயநலப் பணியாளர்களுக்காகச் செபமாலை பக்திமுயற்சி நடைபெறுகின்றது. இச்சூழலில், செபமாலை பக்திமுயற்சியின் வரலாற்றுப் பின்னணி, செபமாலையின் சிறப்பு அம்சங்கள் பற்றி அருள்பணி முனைவர் டென்னிஸ் அவர்கள் விளக்கியதை, கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் ஒலிபரப்பினோம். அதைத் தொடர்ந்து, அவர், பக்திமுயற்சிக்கும் வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை இன்று நமக்கு விளக்குகிறார். மரியின் ஊழியர் சபையின் அருள்பணி முனைவர் டென்னிஸ் அவர்கள், மரியாணும் எனப்படும், உரோம் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் தலைவராவார்.   

செபமாலை பக்திமுயற்சியின் வரலாறு பகுதி 2 – அ.பணி.டென்னிஸ் மஊச

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2021, 14:43