அன்னை தினம் அன்னை தினம் 

மகிழ்வின் மந்திரம்: உண்மை அன்பு, மற்றவரின் உயர்வில் அகமகிழும்

அன்புகூரும் மனிதர், மற்றவருக்கு நல்லது செய்யும்போது, அல்லது, மற்றவர் மகிழ்வாய் இருப்பதைப் பார்க்கும்போது, அவர்களே மகிழ்வாய் வாழ்கின்றனர் (அன்பின் மகிழ்வு 110)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில், அன்பின் பாடல் எனப்படும் 13ம் பிரிவில், அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும் (1கொரி.13:6) என்று கூறியுள்ள அன்பின் பரிமாணத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 109,110ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள  சிந்தனைகள்.....

“chaírei epì te adikía” என்ற பதம், மற்றவரின் தீவினையில் அகமகிழ்வதை, ஒருவர், தன் இதயத்தில் ஆழமான எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றது.  மற்றவருக்கு அநீதி இழைக்கப்படுவதைப் பாரக்கும்போது, அதில் அகமகிழ்கின்றவர், நஞ்சு சார்ந்த எண்ணத்தைக் கொண்டிருப்பவர். அதற்கு  எதிர்மாறாக “sygchaírei te aletheía” என்ற பதம், சரியானதில் அகமகிழ்வதைக் குறிக்கின்றது. அதாவது, அந்த பதம், மற்றவரின் நன்மைத்தனத்தையும், அவர்களின் மாண்பு, திறமைகள் மற்றும், நற்பணிகள் மதிக்கப்படுவதையும் பார்க்கும்போது, ஒருவர் அகமகிழ்வதைக் குறிக்கின்றது. இது, மற்றவரோடு, ஏன், தன் கணவர் அல்லது, தன் மனைவியோடுகூட, எப்போதும் ஒப்பிட்டுக்கொண்டு, மற்றும், போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றவர்களுக்கு இயலாததாகும். இதனால் இவர்கள் தங்களின் தோல்விகளில் இரகசியமாக அகமகிழ்ந்துகொண்டிருப்பார்கள் (அன்பின் மகிழ்வு 109).

அன்புகூரும் மனிதர், மற்றவருக்கு நல்லது செய்யும்போது, அல்லது, மற்றவர் மகிழ்வாய் இருப்பதைப் பார்க்கும்போது, அவர்களே மகிழ்வாய் வாழ்கின்றனர். இவ்வாறு, அவர்கள், கடவுளுக்கு மகிமை அளிக்கின்றனர். ஏனெனில், “முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்” (2கொரி.9:7). மற்றவரின் மகிழ்வில், மகிழ்வைக் காண்கிறவர்களை ஆண்டவர் சிறப்பாகப் புகழ்கின்றார். மற்றவரின் நல்வாழ்வில் எவ்வாறு அகமகிழ்வது என்பதை கற்றுக்கொள்ளத் தவறினாலும், நம் சொந்தத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் கவனம் செலுத்தினாலும், மகிழ்வற்ற வாழ்வுக்கு நம்மையே நாம் தீர்ப்பிட்டுக்கொள்கிறோம். ஏனெனில், “பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை” (தி.பணிகள் 20:35) என்று, ஆண்டவர் இயேசு கூறியிருக்கிறார். ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவருக்கு நல்லது நடக்கும்போது, அந்த மகிழ்வை, அந்த நபரோடு சேர்ந்து, அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் கொண்டாடுவதை அறிந்திருக்கும் இடமாக, குடும்பம் எப்போதும் அமைந்திருக்கவேண்டும். (அன்பின் மகிழ்வு 110)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2021, 15:22