தொழில் தொழில் 

ஹாங்காங்கில், மே 02, தொழில் ஞாயிறு

மே 1, இச்சனிக்கிழமையன்று, உலகெங்கும் தொழில் நாள் சிறப்பிக்கப்படும்வேளை, அந்நாளுக்கு அருகில் வருகின்ற ஞாயிறை தொழில் ஞாயிறாக கடைப்பிடிக்க ஹாங்காங் கிறிஸ்தவர்கள் தீர்மானித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தொழில்கள் இடம்பெறும் இடங்களின் மோசமான நிலைமையை மக்களுக்கும், திருஅவைக்கும் எடுத்துரைக்கும் நோக்கத்தில், ஹாங்காங் கத்தோலிக்கரும், மற்ற கிறிஸ்தவ சபையினரும், இவ்வாண்டு மே 02ம் தேதியன்று, "தொழில் ஞாயிறை" சிறப்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.

மே 1, இச்சனிக்கிழமையன்று, உலகெங்கும் தொழில் நாள் சிறப்பிக்கப்படும்வேளை, அந்நாளுக்கு அருகில் வருகின்ற ஞாயிறை தொழில் ஞாயிறாக கடைப்பிடிக்க ஹாங்காங் கிறிஸ்தவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஹாங்காங் கிறிஸ்தவ தொழில் அமைப்பும், ஹாங்காங் கத்தோலிக்க தொழில் பணிக்குழுவும் இணைந்து, தொழில் ஞாயிறைக் கடைப்பிடிக்க முடிவு எடுத்துள்ளன என்றும், இஞ்ஞாயிறு குறித்து, இந்த அமைப்புகள் அறிக்கை ஒன்றையும், இறையியல் சிந்தனைகளையும் வழங்கியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும், வறுமையோடு தொடர்புடைய மனநோய்களால், ஹாங்காங்கில், 40 முதல் 45 விழுக்காட்டு மக்கள் வரை துன்புறுகின்றனர். அப்பகுதியில், இளையோரே மிகவும் ஏழைகளாக உள்ளனர் என்று, ஆசியச் செய்தி கூறுகிறது. 

ஹாங்காங்கில், 2018ம் ஆண்டுக்கும், 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், வறுமை விகிதம் 15.8 விழுக்காடு அதிகரித்திருந்தது. அந்நிலையால், குறைந்தது 11 இலட்சம் பேர் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்நிலை தற்போது அதிகரித்துள்ளது (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2021, 16:32