ஈராக், சிரிய வழிபாட்டுமுறை கத்தோலிக்க பேராலயத்தில் நம் மீட்பின் அன்னை ஈராக், சிரிய வழிபாட்டுமுறை கத்தோலிக்க பேராலயத்தில் நம் மீட்பின் அன்னை 

நேர்காணல்: அம்மா கற்றுத்தா பாடல் பிறந்த கதை

இயேசு சபை அருள்பணி எக்ஸ் சவரிமுத்து அவர்கள் (28.05.1937-03.03.2021), அன்னை மரியா மீது அளவுகடந்த பக்திகொண்டவர். இவர், கனவு கண்டேன், அம்மா கற்றுத்தா போன்ற பாடல்களை இயற்றி பாடியும் இருப்பவர்.

மேரி தெரேசா - வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி எக்ஸ் சவரிமுத்து அவர்கள் (28.05.1937-03.03.2021), 59 ஆண்டுகள் இயேசு சபையில் துறவியாக வாழ்ந்து, தனது 83வது வயதில், இம்மாதம் 3ம் தேதி இறைபதம் சேர்ந்தார். இவர், திருச்சி புனித வளனார் கல்லூரி, திருமனூர், விலாங்குடி போன்ற இடங்களில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியுள்ளார். தியான மறையுரைகள் வழங்கி பலரை ஆன்மீகத்தில் வழிநடத்தியுள்ள இவர், அன்னை மரியா மீது அளவுகடந்த பக்திகொண்டவர். அருங்கொடை இயக்கத்தில் ஆர்வமாக ஈடுபட்டிருந்த அருள்பணி எக்ஸ் சவரிமுத்து அவர்கள், கனவு கண்டேன், அம்மா கற்றுத்தா போன்ற பாடல்களை இயற்றி பாடியும் இருப்பவர். மதுரை இலொயாலா வெப் டிவியில், அ.பணி எக்ஸ் சவரிமுத்து அவர்கள், அம்மா கற்றுத்தா என்ற அன்னை மரியா பாடல் பிறந்த கதை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். 

நேர்காணல்: அம்மா கற்றுத்தா பாடல் பிறந்த கதை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2021, 12:34