திருத்தந்தை புனித ஆறாம் பவுல் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் 

மகிழ்வின் மந்திரம் : குடும்பம் குறித்து புனித திருத்தந்தை

கணவனும் மனைவியும் தங்கள் பொறுப்புணர்வுகளை செயல்படுத்தும்போது, எது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்தவர்களாக செயல்பட வேண்டும்'.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தை மையப்படுத்தி வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், திருஅவை ஏடுகளில் குடும்பம், என்ற தலைப்பில்  4 பத்திகளில் குடும்பத்தைக் குறித்து 2ம் வத்திக்கான் பொதுச்சங்கமும், திருத்தந்தையர் ஒருசிலரும் கூறும் கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்துள்ளார். இதில் 68ம் பத்தியில் அவர் எடுத்துரைக்கும் கருத்துக்கள் இதோ,

புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் துவக்கத்தில், திருமணம் மற்றும் குடும்பம் குறித்த திருஅவையின் படிப்பினைகளை மேலும் மெருகூட்டி மேம்படுத்தினார். Humanae Vitae என்ற திருமடலில், தம்பதியரிடையே நிலவும் அன்புக்கும், உயிர் வாழ்வைத் தொடர்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பை அத்திருத்தந்தை சிறப்பான விதத்தில் கொணர்ந்துள்ளார். ‘திருமண அன்பு என்பது, பொறுப்புடைய பெற்றோருக்குரிய கடமைகளை கணவனும் மனைவியும் முற்றிலும் உணர்ந்தவர்களாக, விழிப்புணர்வுடன் செயல்படுவதை எதிர்பார்க்கிறது. இன்று அது அதிகம் அதிகமாக வலியுறுத்தப்படும் அதேவேளை, சரியான முறையில் புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் அவசியம். கணவனும் மனைவியும் தங்கள் பொறுப்புணர்வுகளை செயல்படுத்தும்போது, எது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்தவர்களாக, கடவுளுக்கும், அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், மனித குல சமுதாயத்திற்கும் உரிய தங்களுக்குரிய கடமைகளை ஏற்றுக்கொள்பவர்களாக செயல்பட வேண்டும்'.  Evangelii Nuntiandi என்ற திருத்தூது அறிவுரை மடலில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், திருஅவைக்கும் குடும்பத்திற்கும் இடையே நிலவும் உறவை சிறப்பம்சமாக முன்னிலைப்படுத்துகிறார். (அன்பின் மகிழ்வு 68)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2021, 15:16