இந்தியாவில் கிறிஸ்தவ திருமணம் இந்தியாவில் கிறிஸ்தவ திருமணம்  

மகிழ்வின் மந்திரம்:திருமணத்தின் உண்மையான அர்த்தம் கண்டுணரப்பட

குடும்பத்தின் வல்லமை, அன்புகூரும் மற்றும், எவ்வாறு அன்புகூர்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் அதன் திறமையில் அடங்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “குடும்பங்களின் அனுபவங்களும் சவால்களும்” என்ற இரண்டாவது தலைப்பின்கீழ், “சில சவால்கள்” (50-57) என்ற துணைத் தலைப்பில் அமைந்துள்ள பகுதியில், 53ம் பத்தியில் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ....

சில சமுதாயங்கள், இன்னும் பலதாரத் திருமண வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. வேறு சில இடங்களில், பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைக்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மேற்குலகில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களில், திருமணத்திற்குமுன்பே சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்துகொள்ளும் எந்தவித நோக்கமும் இல்லாமலே சேர்ந்து வாழ்வதும் நடைமுறையில் உள்ளன. பல்வேறு நாடுகளில், வளர்ந்துவரும் திருமணத்திற்கு மாற்றான பல்வேறு வாழ்வுமுறைகள் சட்டத்தின்படி ஊக்குவிக்கப்படுகின்றன. இதனால் திருமணத்தின் முறிவுபடாத்தன்மை, வாழ்வுக்குத் திறந்தமனம் கொண்டிருத்தல் உள்ளிட்ட திருமணத்தின் தனிப்பண்புகள் பழங்கால நாகரீகமாகவும், காலத்திற்கு ஒவ்வாத பழக்கமுமாகக் காட்சியளிக்கின்றன. பல நாடுகளில், தனித்துவத்தை முதன்மைப்படுத்தும் இவ்வுலகக் கோட்பாடுகளின் அடிப்படையில் குடும்பம் சிதைக்கப்படுவதற்கும் நாம் சாட்சிகளாக உள்ளோம். அதேநேரம், சர்வாதிகாரம், ஏன், வன்முறையாலும்கூட அமைக்கப்படும் பாரம்பரியக் குடும்பத்தின் பழைய முறைகள், நிச்சயமாகப் புறக்கணிக்கப்படவேண்டியவை. ஆயினும், இது, திருமணத்தையே மரியாதையின்றி நடத்துவதற்கு இட்டுச்செல்லக் கூடாது. மாறாக, திருமணத்தின் உண்மையான அர்த்தம், மற்றும், அதன் புதுப்பித்தலை மீண்டும் கண்டுணர இது வழியமைக்கவேண்டும். குடும்பத்தின் வல்லமை, அன்புகூரும் மற்றும், எவ்வாறு அன்புகூர்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் அதன் திறமையில் அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் பிரச்சனைகள் இவ்வளவு இருந்தாலும், அது, அன்பு தொடங்கி, அனைத்திலும் எப்போதும் வளர முடியும் (அன்பின் மகிழ்வு 53)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2021, 12:44