தேடுதல்

Vatican News
புனித ஜான் போஸ்கோ புனித ஜான் போஸ்கோ 

வாரம் ஓர் அலசல்: புனித ஜான் போஸ்கோவும், இளையோரும்

தாழ்ச்சி, அயராத உழைப்பு, இறைநம்பிக்கை போன்றவை, நிலையற்ற உலகில் நிலையான செல்வங்கள் என்று, புனித ஜான் போஸ்கோவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித ஜான் மெல்கியோர் போஸ்கோ என்ற இயற்பெயரைக்கொண்ட  புனித தொன் போஸ்கோ, இத்தாலியில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த கல்வியாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தன் வாழ்நாளெல்லாம், வறியோரின் பிள்ளைகள் மற்றும், தெருவில் இலக்கு இன்றி அலைந்து திரிந்த இளையோரின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். புனித பிரான்சிசு டி சேல்சின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு, ஆண்களுக்கென தான் துவங்கிய துறவு சபைக்கு, அப்புனிதரின் பெயரையே சூட்டினார். புனித மரிய மசரெல்லோவோடு இணைந்து பெண்களுக்கென கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர் என்னும் துறவற சபையினைத் துவக்கினார். 1876ம் ஆண்டில், பொது நிலையினருக்காக சலேசிய உடன்உழைப்பாளர்கள் என்னும் சபையினை, இவர் துவக்கினார். இந்த மூன்று சபையினரின் நோக்கமும் ஏழைகளுக்கு பணிபுரிவதே ஆகும். இப்புனிதர் இரைபதம் சேர்ந்த நூற்றாண்டு நிகழ்வின்போது, அதாவது, 1988ம் ஆண்டில், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், புனித ஜான் போஸ்கோவை, இளையோரின் தந்தை, ஆசிரியர், மற்றும் நண்பர் என்று அறிவித்தார். இப்புனிதரின் திருநாள் ஒவ்வோர் ஆண்டும் சனவரி 31ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு இப்புனிதரின் திருநாளை, சலேசிய சபையினர், பிப்ரவரி 1, இத்திங்களன்று சிறப்பித்தனர். இத்திருநாளை முன்னிட்டு, சலேசிய சபையின் அருள்பணி முனைவர் ஜெயசீலன் அவர்கள், புனித ஜான் போஸ்கோவும், இளையோரும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர், உரோம் சலேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  

வாரம் ஓர் அலசல்: புனித ஜான் போஸ்கோவும், இளையோரும்
01 February 2021, 15:04