இராணுவ ஆட்சிக்கு எதிரான அமைதி ஊர்வலம் இராணுவ ஆட்சிக்கு எதிரான அமைதி ஊர்வலம் 

மியான்மாரில் மக்கள் போராட்டத்திற்கு மதங்கள் ஆதரவு

கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளையும் புறந்தள்ளி, எல்லா நிலைகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இம்மாதம் 6ம் தேதியிலிருந்து பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

மியான்மாரில் மக்களாட்சியைப் பறித்துக்கொண்ட இராணுவத்திற்கு எதிராக, தேசிய அளவில் இடம்பெறும் அமைதியான போராட்டங்களில், புத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் உட்பட, அனைத்து மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் போன்றோர், நாட்டின் பல்வேறு நகரங்களின் ஆலயங்களின் முகப்பில், மக்களாட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் விளம்பர அட்டைகளுடன் நின்று, பொது மக்களின் நியாயமான விண்ணப்பங்களுக்கு தங்கள் ஆதரவை வெளியிட்டனர்.

கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளையும் புறந்தள்ளி, எல்லா நிலைகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இம்மாதம் 6ம் தேதியிலிருந்து பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். (UCAN)

ஐ.நா. மனித உரிமைகள்

இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உயர் இயக்குனர் Michelle Bachelet அவர்கள், மியான்மார் இராணுவ அரசுக்கு விடுத்துள்ள விண்ணப்பத்தில், சனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்படவேண்டும், மற்றும், பேச்சு சுதந்திரத்திற்கு உறுதி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் அவையில் மியான்மார் குறித்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், சீனா, இரஷ்யா, பிலிப்பீன்ஸ், வெனெசுவேலா, பொலிவியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

இதையொட்டி, யாங்கூனில் கருத்து தெரிவித்துள்ள இளையோர் சிலர், சர்வாதிகாரிகள், ஒருவர் ஒருவரைச் சார்ந்துள்ளனர், மற்றும், அவர்கள் மக்களுக்கு எதிராக உள்ளனர் என்பதில் ஆச்சரியமில்லை என்று கூறினர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2021, 15:40