மியான்மாரின் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக கத்தோலிக்கர்களின் அமைதிப் போராட்டம் மியான்மாரின் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக கத்தோலிக்கர்களின் அமைதிப் போராட்டம் 

மியான்மாரில் ஒப்புரவைக் கொணர விழையும் பல்சமய அமைப்பு

"அமைதிக்காக மதங்கள் - மியான்மார்" என்ற பெயருடன், அனைத்து மதங்களைச் சார்ந்த தலைவர்களும் ஒன்றிணைந்து, மியான்மாரில் அமைதியைக் கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அமைதிக்காக மதங்கள் - மியான்மார்" என்ற பெயருடன், அனைத்து மதங்களைச் சார்ந்த தலைவர்களும் ஒன்றிணைந்து, மியான்மாரில் அமைதியைக் கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

திறந்த மனதுடன் உரையாடலை மேற்கொள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து வரும் இந்த பல்சமய அமைப்பு, மியான்மார் இராணுவத்திற்கும் ஏனைய குழுக்களுக்கும் இடையே ஒப்புரவைக் கொணர தாங்கள் எவ்வகையிலும் உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பின் தலைவராக பணியாற்றும் யாங்கூன் பேராயர் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், இந்த முயற்சியில் ASEAN என்றழைக்கப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மைய சில ஆண்டுகளாக மட்டும் மக்களாட்சியை சுவைத்து வந்த மியான்மார் மக்களுக்கு மீண்டும் அந்த மக்களாட்சி அனுபவத்தையும், சிறுபான்மை சமுதாயங்களின் முழுமையான விடுதலையையும் உறுதி செய்வதற்கு இது தகுந்த நேரம் என்று இந்த பல்சமய அமைப்பு வலியுறுத்தி கூறுகிறது.

அமைதிக்காக அனைவரிடமும் விண்ணப்பிக்கும் இவ்வேளையில், குறிப்பாக, இராணுவத்தினர், உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளவும், அதிகாரம் யாருடையது என்பதை முன்னிறுத்தாமல், மக்களின் நலனை முன்னிறுத்தவும், இன்னும் கூடுதலாக இரத்தம் சிந்தாமல் இருக்கவும் "அமைதிக்காக மதங்கள் - மியான்மார்" அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2021, 16:04