புதன் மறைக்கல்வியுரை புதன் மறைக்கல்வியுரை  

மகிழ்வின் மந்திரம்: திருமணத்தின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட

திருமணம் மற்றும், குடும்பத்தைத் தேர்ந்துகொள்வதற்குரிய காரணங்களை வழங்குவதற்கு, மிகுந்த பொறுப்புணர்வுடன் முயற்சி எடுப்பதே, நமக்குத் தேவைப்படுகின்றது (அன்பின் மகிழ்வு 35)

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "அன்பின் மகிழ்வு (Amoris Latitia) " திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவில்,  'குடும்பத்தின் இன்றைய உண்மை நிலை' குறித்துப் பேசும் பகுதியில் (பத்திகள் 32-49), இக்கால கலாச்சார மாற்றங்களில், உண்மையான குடும்ப அமைப்பை புரிந்து கொள்வதற்கு தடைகளாய் இருக்கின்ற பல்வேறு கூறுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 35வது பத்தியில், திருமணம் மற்றும், குடும்பத்தைத் தெரிவுசெய்வதற்குரிய காரணங்களையும், நோக்கங்களையும், கிறிஸ்தவர்கள் எடுத்துரைக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமணத்தைக் குறித்து இன்று கூறப்படும் கருத்துக்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்காகவோ, அல்லது, நவீனமாக இருப்பதை விரும்பியோ, மனித மற்றும், நன்னெறித் தவறுகளுக்குமுன், கையறுநிலையை உணர்ந்தோ, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், திருமண வாழ்வைப் பரிந்துரைப்பதை நம்மால் நிறுத்த முடியாது. இந்நிலையில், நம்மால் இயன்ற, மற்றும், நாம் வழங்கவேண்டிய விழுமியங்களை நாம் இழக்கச்செய்வோம். இக்காலத்திய தீமைகள், காரியங்களை மாற்றும் என்ற எண்ணத்தில், அவற்றை இகழ்ந்துகொண்டிருப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை என்பது உண்மையே. அதேநேரம், வெறும் அதிகாரத்தால் விதிமுறைகளை திணிக்க முயற்சிப்பதும் உதவியாக இருக்காது. திருமணம் மற்றும், குடும்பத்தைத் தேர்ந்துகொள்வதற்குரிய காரணங்களையும், நோக்கங்களையும் வழங்குவதற்கு, மிகுந்த பொறுப்புணர்வு மற்றும், மனத்தாராளத்துடன் முயற்சி எடுப்பதே, நமக்குத் தேவைப்படுகின்றது. இதன் வழியாக, ஆண்களுக்கும், பெண்களுக்கும், கடவுள் வழங்கும் அருளுக்கு சிறந்தமுறையில் அவர்கள் பதிலளிக்க நம்மால் உதவமுடியும். (அன்பின் மகிழ்வு எண் 35)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2021, 14:37