மனிலா மாநகரில் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் மனிலா மாநகரில் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

மகிழ்வின் மந்திரம் : சிறார் சந்திக்கும் பிரச்சனைகள்

சிறார், குடும்பங்களில், பள்ளிகளில், குழுமங்களில், மற்றும், கிறிஸ்தவ நிறுவனங்களில், பாலியலில் முறைகேடுகளை எதிர்கொள்வது, அதிக கேவலமாக உள்ளது. (மகிழ்வின் மந்திரம் 45)

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் இரண்டாம் பிரிவில், 'குடும்பங்களின் அனுபவங்களும் சவால்களும்' என்ற தலைப்பில், இளையோர், திருமண வாழ்வைத் தேர்ந்துகொள்வதற்கு சந்திக்கும் பிரச்சனைகள், மற்றும், சவால்கள், வயதுவந்தோர் திருமண வாழ்வை முறித்துக்கொள்வது, திருமண வாழ்வை மகிழ்வோடு தேர்ந்துகொள்ளும் தம்பதியர், குழந்தைகளை அதிகம் பெற்றெடுக்கத் தயங்குவது போன்ற விடயங்களில் காணப்படும் காரணங்களை, 42,43, மற்றும், 44ம் பத்திகளில் விவரித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 45ம் பத்தியில், சமுதாயங்களில், பல்வேறு வழிகளில் முறைகேடுகளை எதிர்கொள்ளும் சிறார் பற்றி, திருத்தந்தை, கவலையோடு தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

இன்றைய நம் சமுதாயங்களில், மணமாகாத பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள், பெருமெண்ணிக்கையில் உள்ளனர். இவர்களில் பலர், தங்கள் பெற்றோரில் ஒருவரிடம், அல்லது, முறைப்படி மணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற குடும்பத்தில் வளர்கின்றனர். மேலும், இன்றைய நம் சமுதாயத்தில், சிறார் பாலியல்முறையில் பயன்படுத்தப்படுவது கேவலமாக உள்ளது, மற்றும், அந்த தவறு தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. போரினால், பயங்கரவாதத்தால், அல்லது, திட்டமிட்ட குற்றக்கும்பலால் வன்முறையைச் சந்திக்கும்  சமுதாயங்கள், குடும்பம் சீரழிவடைவதற்குச் சான்றுகளாக உள்ளன. இந்நிலையை, எல்லாவற்றிற்கும் மேலாக, ‘தெருச் சிறார்’ அவலம் அதிகரித்துவரும் மாநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில், வெளிப்படையாகக் காணமுடிகின்றது. சிறார், மிகவும் பாதுகாப்பான இடங்களில், குறிப்பாக, குடும்பங்களில், பள்ளிகளில், குழுமங்களில், மற்றும், கிறிஸ்தவ நிறுவனங்களில், பாலியலில் முறைகேடுகளை எதிர்கொள்ளும்போது, அது, அதிக அவமானமாக, கேவலமாக உள்ளது. (மகிழ்வின் மந்திரம் 45)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2021, 14:21