புனித யோசேப்பு புனித யோசேப்பு  

புனித யோசேப்பு ஆண்டு- பேரருள்திரு லியோ ஆரோக்ய ராஜ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதி, “Patris corde” அதாவது, “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்ற தலைப்பில் திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டு, புனித யோசேப்பு யூபிலி ஆண்டை அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். இந்த அறிவிப்பின் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதி, “Patris corde” அதாவது, “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்ற தலைப்பில் திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டு, புனித யோசேப்பு யூபிலி ஆண்டை அறிவித்தார். கடந்த டிசம்பர் 8ம் தேதியிலிருந்து திருஅவையில் கொண்டாடப்பட்டு வருகின்ற “புனித யோசேப்பு ஆண்டு” 2021ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதியன்று நிறைவடையும். இந்த யோசேப்பு ஆண்டு பற்றிய தன் சிந்தனைகளை, இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், பேரருள்திரு லியோ ஆரோக்ய ராஜ் அவர்கள். இவர், ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களை கண்காணிக்கும் கத்தோலிக்கத் திருஅவையின் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். இந்த உச்ச நீதிமன்றத்தில், ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், முதன்முறையாக, நீதிபதியாகப் பணியாற்றும் பெருமைக்கு உரியவர், பேரருள்திரு லியோ ஆரோக்ய ராஜ் அவர்கள். 

புனித யோசேப்பு ஆண்டு- பேரருள்திரு லியோ ஆரோக்ய ராஜ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2021, 13:17