அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol சுற்றி பாதுகாப்பு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol சுற்றி பாதுகாப்பு 

அமெரிக்க ஐக்கிய நாட்டில் அமைதி காக்க அழைப்பு

பேச்சு சுதந்திரம், சட்டம் ஒழுங்கு, நியாயமான மற்றும், சுதந்திரத் தேர்தல்கள் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு, வாஷிங்டனில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு அதிர்ச்சியளித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol மீது சனவரி 6, இப்புதனன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ள அதேநேரம், அமைதி மற்றும், பொதுநலனுக்காக, மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, துறவு சபைகளின் தலைவர்களும், ஏனைய நாடுகளின் ஆயர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இத்தாக்குதல்கள் குறித்து, மெக்சிகோ நாட்டு ஆயர் பேரவையின் சார்பில் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவுசெய்துள்ள, அப்பேரவையின் பொதுச்செயலர் ஆயர்  Alfonso Miranda Guardiola அவர்கள், இந்நிகழ்வு மிகுந்த கவலை தருகின்ற அதேவேளை, சனநாயகமும், சட்ட ஒழுங்கும் மீண்டும் காக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாக்குதல்கள் குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசியுள்ள, நியுயார்க் புனித பொனவெந்தூர் பல்கலைக்கழகத்தின் பிரான்சிஸ்கன் நிறுவனத்தின் தலைவரான அருள்பணி David B. Couturier அவர்கள், வாஷிங்டன் Capitol கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறை, அமெரிக்க வரலாற்றில், ஓர் இருண்ட நேரம் என்று கவலை தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம், சட்டம் ஒழுங்கு, நியாயமான மற்றும், சுதந்திரத் தேர்தல்கள் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு, வாஷிங்டனில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு அதிர்ச்சியூட்டியுள்ளது மற்றும், அவர்களை அது கதிகலங்க வைத்துள்ளது என்றும், அருள்பணி Couturier அவர்கள் கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப் அவர்களின் ஆட்சிக் காலத்தின் கடைசிக் காலக்கட்டங்கள், சர்வாதிகாரம், பிரிவினை, மற்றும், ஒருதலைச்சார்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்டிருந்தன என்றும், அமெரிக்கர்கள், இவற்றை, அண்மைத் தேர்தலில், தெளிவாகவும், உரக்கவும் பேசியுள்ளனர் என்றும், அருள்பணி Couturier அவர்கள் கூறியுள்ளார்.

இன்னும் சில நாள்களில் டிரம்ப் அவர்கள், தன் பணியிலிருந்து செல்வார் மற்றும், அமெரிக்கா, தனது அண்மையக்கால அச்சுறுத்தும் நிலையிலிருந்து மீண்டுவரும் என்றும், பிரான்சிஸ்கன் துறவு சபையின் அருள்பணி Couturier அவர்கள் கூறியுள்ளார். (Fides,CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2021, 14:51