சுற்றுச்சூழல் பற்றிய பசுமைக் கனவு திட்டம்

துணிகள், காலணிகள் மற்றும், ஏனையப் பயன்பாட்டுப் பொருள்களை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், உற்பத்தி செய்வதற்கு, பசுமைக் கனவு திட்டத்தின் வழியாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato si’ அதாவது, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலால் உந்தப்பட்டு, பசுமைக் கனவு என்ற தலைப்பில், சுற்றுச்சூழல் குறித்த மூன்றாண்டு திட்டம் ஒன்றை ஊக்குவித்துள்ளது, இத்தாலிய சலேசிய பல்கலைக்கழகம் ஒன்று.

இத்தாலியின் வெனிஸ் மற்றும், வெரோனா நகரங்களில் அமைந்துள்ள சலேசிய பல்கலைக்கழகம் (IUSVE), சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும், நடைமுறை பழக்கங்களில் மாற்றங்களையும் உருவாக்குவதற்கென்று, பசுமைக் கனவு என்ற திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.

துணிகள், காலணிகள் மற்றும், ஏனையப் பயன்பாட்டுப் பொருள்களை தற்போது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தங்களின் உற்பத்தி முறைகளை மாற்றுவதற்கு இத்திட்டத்தின் வழியாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்கு உதவியாக, அருங்காட்சியகம் ஒன்றையும் திறந்துவைத்துள்ள அந்த பல்கலைக்கழகம், உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, உணவுகளின் தரம், பயன்படுத்தும் ஆடைகள் போன்றவை குறித்தும், இவற்றில் அறநெறிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பது குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2021, 15:16