பங்களாதேஷில் கோவிட் விழிப்புணர்வுப் பணியில் காரித்தாஸ் பங்களாதேஷில் கோவிட் விழிப்புணர்வுப் பணியில் காரித்தாஸ்  

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிதியுதவி

சந்திப்புச் சாலைகளில், கைகளைக் கழுவும் வசதிகளையும், குளியலறைகளையும், கழிவு நீர் வடிகால்களையும் சீரமைத்து உதவி வருகிறது பங்களாதேஷ் காரித்தாஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டில் கோவிட் -19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், புது வாழ்வைத் துவங்க நிதியுதவிகளை வழங்கி வருகிறது, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுள் 2,685 பேருக்கு உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ள, காரித்தாஸ் அமைப்பு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று தவணையாக 15,000 பங்களாதேஷ் பணமான டாக்காவை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தக் கொள்ளைநோயின் விளைவாக, வேலைவாய்ப்புகளை இழந்த ஏழை மக்கள், சிறு தொழில்களை ஆரம்பித்து, வருமானம் ஈட்ட உதவும் நோக்கத்தில், செயல்படுத்தப்பட்டுவரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் இத்திட்டம், கோவிட் கொள்ளைநோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் உருவாக்குவதையும் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோவிட் கொள்ளைநோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில், பல்வேறு சந்திப்புச் சாலைகளில், கைகளைக் கழுவும் வசதிகளையும், ஏழை மக்களுக்கென குளியலறைகளையும், கழிவு நீர் வடிகால்களையும் சீரமைத்து உதவிவருகிறது, பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2021, 15:05