பிரான்சில் கொரோனா தடுப்பூசி பிரான்சில் கொரோனா தடுப்பூசி 

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை

கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிக்கும் முயற்சியில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் - பிரேசில் ஆயர் பேரவைத் தலைவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக தடுப்பூசிகள் வழங்கப்படும்போது, அவற்றை, குடிமக்கள் ஏற்குமாறு கூறியுள்ள பிரேசில் ஆயர்கள், இந்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ளது என்பதை, அரசு உறுதிசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.      

இம்மாத இறுதியில், மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணி ஆரம்பமாகும் என்று கூறியுள்ள, பிரேசில் நாட்டு நலவாழ்வு அமைச்சர் Eduardo Pazuello அவர்கள், பிரேசில் நாடு, 35 கோடியே 40 இலட்சம் தடுப்பூசிகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும், அரசுத்தலைவர் Jair Bolsonaro அவர்களும் அந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரேசில் ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் Walmor Oliveira de Azevedo அவர்கள் வெளியிட்ட மடல் ஒன்றில், தடுப்பூசிகள் அனைவருக்கும் விரைவில் வழங்கப்படுவதில், அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிக்கும் முயற்சியில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கூறியுள்ள பேராயர் de Azevedo அவர்கள், இந்த சமுதாயச் சவாலையும், நலப்பிரச்சனையையும் எதிர்கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.   

தடுப்பூசி வழங்குவது, தனிப்பட்டவரின் நிகழ்வு அல்ல, மாறாக, இது ஒரு சமுதாய நிகழ்வு என்பதை சுட்டிக்காட்டியுள்ள பேராயர், பிரேசிலின் அனைத்து தேசிய மற்றும், திருஅவை நிறுவனங்கள், இந்த பெருந்தொற்று பிரச்சனையை களைவதற்கு, தங்களின் பங்கை ஆற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கடந்த 24 மணி நேரத்தில், 1,200க்கு மேற்பட்டவர்கள், கோவிட்-19ஆல் இறந்துள்ளனர் மற்றும், 63 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2021, 14:54