திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மகிழ்வின் மந்திரம் - அன்பிற்கு தன்னை அர்ப்பணித்தல்

திருத்தந்தை : குடும்பம் என்பது பிரச்சனையல்ல, மாறாக, அது ஒரு நல்வாய்ப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

குடும்பத்தின் உண்மை நிலைகளை புரிந்துகொள்ள விரும்பும் எவரும், திருவிவிலியத்தால் தூண்டப்பட்டவர்களாக இருந்திடல் வேண்டும். திருமணம், மற்றும், குடும்பம் குறித்த திருஅவையின் படிப்பினைகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்திடல் வேண்டும். இதனை மனதில் கொண்டதாக  Amoris Laetitia ஏட்டின் மையப் பகுதியோ, அன்பிற்கு தன்னை அர்ப்பணித்ததாக உள்ளது. இறைவனின் திட்டத்திற்கு இயைந்த வகையில் குடும்பங்களை உருவாக்குவதில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை ஆய்வுசெய்யும் இவ்வேடு, ஒரு முழு அத்தியாயத்தையும் குழந்தை வளர்ப்பைப்பற்றி பேச அர்ப்பணித்துள்ளது. இன்றைய உண்மை நிலைகள் குறித்த மேய்ப்புப்பணி தெளிந்து தேர்தல், மற்றும், இறை இரக்கத்திற்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், குடும்ப ஆன்மீக்த்தை மையப்படுத்திய கலந்துரையாடல்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது இவ்வேட்டில். குடும்பங்களின் தனிப்பட்ட தேவைகள் குறித்த இவ்வேட்டின் பகுதிகளை, நின்று, நிதானமாக வாசிப்பதன் வழியாகவே, ஆயர் மாமன்றத்தின் பரித்துரைகளை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஏட்டின் நான்காம் மற்றும் ஐந்தாம் அத்தியாயங்கள் குறித்து திருமணமான தம்பதியர் அக்கறை கொண்டிருப்பர், அதேவேளை, மேய்ப்புப்பணியளார்களோ, ஆறாவது அத்தியாயம் குறித்து அக்கறை கொண்டிருப்பர். ஆனால், எட்டாம் அத்தியாயமோ அனைவருக்கும் சவால்களை முன்வைக்கும் ஒன்றாக உள்ளது. இந்த ஏட்டை வாசித்தபின் அனைவரும், தாங்கள் அன்புகூரவும், குடும்ப வாழ்வின் மகிழ்வை உணரவும், அழைப்புப் பெற்றிருப்பதை உணர்வர் என்பது எனது நம்பிக்கை என இவ்வேட்டின் துவக்கத்தில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம் என்பது பிரச்சனையல்ல, மாறாக, அது ஒரு நல்வாய்ப்பு என கூறியுள்ளார்.(AL 6,7)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2021, 15:04