குழந்தைகளுடன் பெற்றோர் குழந்தைகளுடன் பெற்றோர் 

மகிழ்வின் மந்திரம் : தாய் தந்தையை மதித்து நட

'மதித்து நாட' என்பது, குடும்ப, மற்றும், சமுதாயத்திற்குரிய அர்ப்பணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மதக் காரணங்களை முன்வைத்து, இவைகளை நாம் ஒதுக்கி வைக்க முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவில், முதலில் தம்பதியர் பற்றிப் பேசி, பின், குழந்தைகள் பற்றி எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதில் பெற்றோருக்கு இருக்கும் கடமையையும், குழந்தைகள் எவ்வாறு தங்கள் பெற்றோரை மதிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறுகின்றார். குழந்தைகளைக் கண்டித்து வளர்ப்பதன் வழியாக, கல்வி வழங்கும் கடமை பெற்றோருக்கு உள்ளதைக் குறித்து கூறப்பட்டுள்ளதை நீதிமொழிகள் நூலில் வாசிக்கின்றோம் (நீ.மொழி.3:11-12; 6:20-22; 13:1; 22:15; 23:13-14; 29:17). அதேவேளை, குழந்தைகளும் தங்கள் பங்கிற்கு, ஆற்றவேண்டிய கடமையை, ‘உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட’ (வி.ப.20:12) என்ற கட்டளையில் காண்கிறோம். 'மதித்து நாட' என்பது, குடும்ப, மற்றும், சமுதாயத்திற்குரிய அர்ப்பணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மதக் காரணங்களை முன்வைத்து, எச்சூழலிலும் இவைகளை நாம் ஒதுக்கி வைக்க முடியாது (மாற்.7:11-13). சீராக் நூல் கூறுவது போல், தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர் (சீராக் 3:3-4).

இவ்வாறு, தாய் தந்தையரை மதித்து நடக்க குழந்தைகளை வலியுறுத்துகிறார் திருத்தந்தை (அன்பின் மகிழ்வு 17)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2021, 14:45