விவசாயிகள் போராட்டம்  விவசாயிகள் போராட்டம்  

வாரம் ஓர் அலசல்: விவசாயிகளைப் பாதுகாப்போம்

இந்திய நடுவண் அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டில்லியின் எல்லையில் 19வது நாளாக போராடி வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்திய நடுவண் அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டில்லியின் எல்லையில் 19வது நாளாக போராடி வருகின்றனர். டிசம்பர் 14, இத்திங்களன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை உட்பட, பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப்போவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் உள்ள விவசாயிகள், இத்திங்களன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், அமைப்புகளும், இந்தியாவில் ஏறத்தாழ எல்லாத் துறைகளைச் சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை லொயோலா வெப் டிவி இயக்குனர் இயேசு சபை அருள்பணி சேவியர் அந்தோனி அவர்கள், டில்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் நம் எதிரிகள் அல்ல, நம் நண்பர்கள் என்று, உணர்ச்சிப்பூர்வமாக தன் கருத்தை வலைக்காட்சியில் பதிவுசெய்துள்ளார்.

வாரம் ஓர் அலசல்: விவசாயிகளைப் பாதுகாப்போம்

இயேசு சபை அருள்பணி சேவியர் அந்தோனி அவர்கள் அனல்தெறிக்கப் பேசியதைப் போன்று, டில்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள், நம் நண்பர்கள். விவசாயிகள் குடிமக்கள் அனைவரின் உணவு வீரர்கள். நாட்டின் முதுகெலும்பாய் உள்ள விவசாயிகள், விவசாயத்தின் அச்சாணியாய் உள்ளனர்.

எனவே விவசாயத்தை அன்புகூர்வோம், அதனைக் காப்போம், விவசாயிகளைப் பாதுகாப்போம்

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2020, 15:05