La Civiltà Cattolica இதழ் La Civiltà Cattolica இதழ் 

அணையா விளக்கை தொடர்ந்து காப்பாற்றிவரும் La Civiltà Cattolica

கத்தோலிக்க திருஅவைக்கு முழு விசுவாசத்துடன், காலத்தின் அறிகுறிகளை முற்றிலும் உணர்ந்ததாக, உலகத்திற்கு தன் இதயத்தைத் திறந்ததாகச் செயல்படுவது, La Civiltà Cattolica இதழின் தனித்துவம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு சபையினரால் நடத்தப்படும் திருப்பீடச் சார்பு இதழ், எவ்வித இடைவெளியும் இன்றி 170 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ளதை முன்னிட்டு, வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் தலைவர், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு.

La Civiltà Cattolica என்ற இதழின் இயக்குனர், அருள்பணி Antonio Spadaro அவர்களுக்கு முதுபெரும் தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், அணையா விளக்கை தொடர்ந்து காப்பாற்றிவருவதை, இவ்விதழ் எவ்வித இடைவெளியும் இன்றி 170 ஆண்டுகளாக வெளியிடப்பட்டுவருவது சுட்டிக்காட்டுகின்றது என கூறியுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கு முழு விசுவாசத்துடன், காலத்தின் அறிகுறிகளை முற்றிலும் உணர்ந்ததாக,  உலகத்திற்கு தன் இதயத்தைத் திறந்ததாகச் செயல்படுவது, La Civiltà Cattolica இதழின் தனித்துவமாக உள்ளது என, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

கிறிஸ்துவின் மீதான விசுவாசம், மனிதனுக்கு பலத்தை வழங்குவதுடன், எத்தடைகளையும் வெற்றிகொள்வதற்கும் உதவுகிறது எனக்கூறும், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் முதுபெரும்தந்தையின் வாழ்த்துச் செய்தி, கிறிஸ்துவின் மீது கொள்ளும் அன்பிற்கும் அயலவர் மீது கொள்ளும் அன்பிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவு குறித்தும் விவரித்துள்ளது.

கத்தோலிக்க திருஅவைக்கும், திருத்தந்தைக்கும் விசுவாசமுடன் இருந்து, கலாச்சாரத்தில் கிறிஸ்தவ விசுவாசம், ஏனைய மதங்கள், கொள்கைகள், மெய்யியல், அரசியல், சமுதாய இயக்கங்கள் போன்றவைகளுடன் கிறிஸ்தவ உரையாடலுக்கு, கத்தோலிக்க பாரம்பரியங்களின் அடிப்படையில், சிறப்பு பங்காற்றியதில், La Civiltà Cattolica இதழின் பணியை வெகுவாகப் பாராட்டியுள்ளார், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு.

பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய பரந்த அறிவு, மதங்களைக் குறித்த சரியான அறிவு, அறிவியல் முன்னேற்றத்தைக் கணித்தல்,  சமுதாயப் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தல், என பல்வேறு துறைகளில், இயேசு சபையினரின் ஞானம், இவ்விதழின் தொடர்ந்த வெளியீட்டுக்கும், வெற்றிக்கும் சிறப்பான விதத்தில் உதவியுள்ளது என மேலும் தன் வாழ்த்துக் கடித்தில் கூறியுள்ளார், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2020, 15:19