பாலஸ்தீனாவில் கிறிஸ்மஸ்  குடில் பாலஸ்தீனாவில் கிறிஸ்மஸ் குடில் 

கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 241220

கிறிஸ்து, இன்று நம் மத்தியில் பிறந்திருக்கிறார். அவர் தோல்விக்கு அல்ல, மாறாக, வெற்றிக்கு நம்மை இட்டுச்செல்கின்றவர். தீமையின் மீதும், இருளின் மீதும் வெற்றிகொள்ள அவர் நமக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், நம்மோடு உடனிருந்து போராடுகின்ற ஒரு போராளி கிறிஸ்து.

மேரி தெரேசா-வத்திக்கான்

எம் நெஞ்சுக்கு நெருக்கமான வத்திக்கான் வானொலியின் அன்பு உள்ளங்களே, உங்கள் எல்லாருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்.

கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி 241220

இதோ எல்லா மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக, அனைவருக்கும் பொதுமையாக, இம்மண்ணில் மனிதராகப் பிறந்தவர், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எம்மை புது விடியலாக்க வந்த விடியலின் பிறப்பே வா என, அவரை நம் உள்ளங்களில் வரவேற்று மகிழ்வோம். அவரது பிறப்பு கொணர்ந்த, உலகம் தர இயலாத அமைதி, அன்பு, ஆனந்தம், மகிழ்வு, நம் மனமென்னும் இல்லக் குடிலில் மல்லிகைப் பந்தல்போல் மணக்கட்டும்.

“அன்று புனித பூமியின் பெத்லகேம் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த கிறிஸ்து, இன்று நம் மத்தியில் பிறந்திருக்கிறார். அவர் தோல்விக்கு அல்ல, மாறாக, வெற்றிக்கு நம்மை இட்டுச்செல்கின்றவர். தீமையின் மீதும், இருளின் மீதும் வெற்றிகொள்ள அவர் நமக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், நம்மோடு உடனிருந்து போராடுகின்ற ஒரு போராளி கிறிஸ்து. அவரது பிறப்பைத்தான் இன்று நாம் கொண்டாடுகிறோம்” (சேலம் முன்னாள் ஆயர் மேன்மைமிகு சிங்கராயன்).

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள அச்சம் நிறை ஒரு காலக்கட்டத்தில், டிசம்பர் 25, இவ்வெள்ளியன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்வேளையில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் பொதிந்திருக்கும் எளிமை, அவர் கொணர்ந்த மனித மாண்பின் மதிப்பு, தாழ்ச்சியில் அவர் கண்ட தனித்துவம் நம் வாழ்வில் மிளிரட்டும். புதுமை நிறைந்த கிறிஸ்துவின் பிறப்பு, நம் உள்ளத்தில் நிகழ்ந்து, நம் வாழ்வு புதுமை பெறட்டும். கோவிட்-19 பெருந்தொற்று தொல்லைகள் துன்பங்கள், கதிரவன் கண்ட பனித்துளிபோல் மறையட்டும். வத்திக்கான் வானொலியின் அன்பு இதயங்களே, உங்கள் எல்லாருக்கும் மீண்டும் எமது இனியநல் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 December 2020, 13:16