மதநல்லிணக்கத்திற்காக ஊர்வலம் மதநல்லிணக்கத்திற்காக ஊர்வலம் 

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன

இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் ஆகிய மாநிலங்களில் அதிகம் இடம்பெற்றுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் இரு கத்தோலிக்க திரு உருவச் சிலைகள், அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தின் Morapai என்ற ஊரிலுள்ள திரு இருதய கோவிலின் வெளியே, இரு சிறு மாடங்களில் வைக்கப்பட்டிருந்த அன்னைமரியா திருஉருவச் சிலையையும், புனித அன்னை தெரேசா திருஉருவச் சிலையையும் சேதமாக்கிச் சென்றுள்ளனர், மர்ம நபர்கள்.

கடந்த சனிக்கிழமையன்று, நவம்பர் 28ம் தேதி காலை இதைக் கவனித்த Morapai பங்குத்தள அருள்பணியாளர்  சூசையப்பன் அவர்களும், துணை பங்குத்தந்தை கௌதம் நாஸ்கர் அவர்களும், இவ்விவரத்தை காவல்துறையிடமும், ஊர்த்தலைவரிடமும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கோவிலை வந்து பார்வையிட்ட Baruipur மறைமாவட்ட ஆயர் Shyamal Bose அவர்கள், இரு திருஉருவச் சிலைகளும் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கு காரணமானவர்களை கைது செய்யவும், அத்திருவுருவச் சிலைகளை மீண்டும் நிறவவும், அரசு அதிகாரிகள் உறுதி வழங்கியுள்ளதாக ஆயர் Shyamal Bose அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக இந்திய கிறிஸ்தவர்கள் அவை, அண்மை ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் பெருமளவில் அதிகாரித்து வருவதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

UCF எனும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் கூற்றுப்படி, இந்த ஆண்டில் நவம்பர் முடிவு வரை இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 250 தாக்குதல்கள் இடம்பெறுள்ளன. கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கார் ஆகியவை முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2020, 15:13