தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles, செய்தியாளர்களுடன் சந்திப்பு பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles, செய்தியாளர்களுடன் சந்திப்பு  (AFP or licensors)

பிலிப்பீன்சில் மறைபரப்புப்பணியை புதுப்பிக்க அர்ப்பணிப்பு

1521ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, பிலிப்பீன்ஸ் நாட்டின் Limasawa தீவில், முதன்முதலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் மறைபரப்புப்பணியைப் புதுப்பிக்கும் நோக்கத்தில், அந்நாட்டு ஆயர்கள், 2021ம் மேய்ப்புப்பணி ஆண்டை, “நாடுகளுக்கு மறைப்பணி” என்ற தலைப்பில் சிறப்பிக்கத் தீர்மானித்துள்ளனர்

பிலிப்பீன்சில், 2021ம் ஆண்டில், நற்செய்தி முதன் முதலில் அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு சிறப்பிக்கப்படவுள்ளவேளையில், அந்த ஆண்டில் மறைப்பரப்புபணியை புத்துயிர்பெறச் செய்வதற்கு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

1521ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, பிலிப்பீன்ஸ் நாட்டின் Limasawa தீவில், முதன்முதலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, அந்நாட்டு ஆயர்கள், ஒன்பது ஆண்டுகள் ஆன்மீகத் தயாரிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

2012ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், திருஅவை மற்றும், நம்பிக்கை வாழ்வை  மையப்படுத்தி, ஒவ்வொரு தலைப்பில், தலத்திருஅவையில் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.  

2021ம் ஆண்டின் மேய்ப்புப்பணி ஆண்டு, நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று தொடங்கும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles அவர்கள், தன் மேய்ப்புப்பணி அறிக்கை வழியாக அறிவித்துள்ளார்.

28 November 2020, 14:37