பிரான்ஸ் நாட்டின் அணு ஆயுத நீர்முழ்கி கப்பல் பிரான்ஸ் நாட்டின் அணு ஆயுத நீர்முழ்கி கப்பல் 

அணு ஆயுதங்களில் முதலீடு செய்யப்படுவது தடுக்கப்பட

Pax Christi அமைப்பு - அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு செலவழிக்கப்பட்ட தொகையைப்போல் தற்போது அந்த அணு ஆயுத ஒழிப்பிற்கும் பெருந்தொகை செலவழிக்கப்பட வேண்டியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அண்மையில் ஐ.நா. நிறுவனத்தில், ஏற்றுகொள்ளப்பட்ட அணு ஆயுத பயன்பாட்டு தடை ஒப்பந்தம் குறித்து, தன் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளது, Pax Christi எனும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

அணு ஆயுத ஒழிப்பு ஓப்பந்தததை தற்போது 50 நாடுகள் ஏற்றுள்ள நிலையில், இது சட்ட ரீதியாக அமல்படுத்தப்படுவதற்குரிய பலத்தைப் பெற்றுள்ளது என்றுரைத்த  ஸ்காட்லாந்து Pax Christi அமைப்பின் தலைவர் Marian Pallister அவர்கள், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது முக்கியமல்ல, மாறாக, பேரழிவு தரும் இந்த ஆயுதங்களில் முதலீடு செய்யப்படுவதை தடுப்பதே அடுத்த குறிக்கோளாக இருக்கவேண்டும் என்றார்,

அணு ஆயுதங்களில் முதலீடு செய்வதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணம், ஏழ்மை ஒழிப்பு மற்றும் நல ஆதரவுப் பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டால், நல்லதொரு வருங்காலத்திற்குரிய பாதை அமைக்கப்படும் என எடுத்துரைத்தார் Pallister.

அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு செலவழிக்கப்பட்ட தொகையைப்போல் தற்போது அந்த அணு ஆயுத ஒழிப்பிற்கும் பெருந்தொகை செலவழிக்கப்பட வேண்டியுள்ளது என்ற கவலையையும் வெளியிட்ட Pax Christi அமைப்பு, தற்போது இந்த ஒப்பந்தத்தை ஏற்றுள்ள நாடுகளில் கத்தோலிக்கர்கள் எடுத்த முயற்சிகளையும் பாராட்டியுள்ளது.

தொடர்ந்து பல காலமாக இடம்பெற்ற முயற்சிகளுக்குப்பின் தற்போது ஆரம்ப வெற்றிகள் தெரியத் துவங்கியுள்ளபோதிலும், அணு ஆயுதங்களின் முழு ஒழிப்புக்குரிய வெற்றிக்கென தங்கள் போராட்டங்கள், அனைத்து நல்மனதுடையோரின் ஒத்துழைப்புடன் தொடரும் என மேலும் கூறியது Pax Christi கத்தோலிக்க அமைப்பு.

தற்போது 50 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அணு ஆயுத பயன்பாடு தடை ஒப்பந்தம், இன்னும் 90 நாட்களில் அனைத்துலக அளவில், சட்ட ரீதியாக அமலுக்கு வர உள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2020, 14:58