லெபனான் நாட்டு கர்தினால் Beshara Raï. லெபனான் நாட்டு கர்தினால் Beshara Raï. 

லெபனானுக்கு தேவை, வலுவான, திறமையான நிர்வாக அமைப்பு

கர்தினால் Rai : லெபனான் அரசு, முதலில் தன் செயல்பாடுகளில் நம்பிக்கை கொள்ளவேண்டும், அதேவேளை, மக்களும் தன்னில் நம்பிக்கை கொள்ளும்படி நடந்துகொள்ளவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள் 

லெபனான் மக்களிடையே நம்பிக்கைகளை உருவாக்கும் நோக்கத்தில், வலுவான, திறமைவாய்ந்த, நிர்வாக அமைப்பு ஒன்று அவசரமாக உருவாக்கப்படவேண்டும் என லெபனான் இடைக்காலப் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு கர்தினால் Beshara Raï.

லெபனான் நாட்டிற்கு தற்போது அவசியமாக தேவைப்படும் நடவடிக்கைகளாக, பொது மக்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது நீக்கப்படவேண்டும், மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது தடுத்து நிறுத்தப்படவேண்டும், வெளிநாட்டு உதவிகளும் முதலீடுகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தை இடைக்காலப் பிரதமர் Mustafa Adib அவர்களுக்கு முன்வைத்துள்ளார், மாரனைட் வழிபாட்டு முறை  தலைவர் கர்தினால் ராய்.

லெபனான் அரசு முதலில் தன் செயல்பாடுகளில் நம்பிக்கை கொள்ளவேண்டும், அதேவேளை, மக்களும் தன்னில் நம்பிக்கை கொள்ளும்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற அழைப்பை முன் வைத்த கர்தினால் ராய் அவர்கள், அரசியல்வாதிகளுக்கான  அரசாக இது செயல்படாமல், மக்களுக்குரிய அரசாக செயல்படவேண்டும் என விண்ணப்பித்தார்.

அண்மை வெடி விபத்தால் பெருமளவு சேதமடைந்துள்ள தலைநகர் பெய்ரூட்டையும், அதன் துறைமுகத்தையும் கட்டியெழுப்பவேண்டிய கடமையை வலியுறுத்திய கர்தினால் ராய் அவர்கள், பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தேவையான நிதியுதவிகளை வழங்கி, மாணவர்களின் கல்வி தொடர உதவவேண்டும் என கேட்டுக்கொண்டார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2020, 12:56