தேடுதல்

மலேசியா புத்தாண்டு நாளுக்கு அலங்காரங்கள் - கோப்புப் படம் மலேசியா புத்தாண்டு நாளுக்கு அலங்காரங்கள் - கோப்புப் படம் 

கொள்ளைநோய் ஒழிப்பில் பல்சமயத் தலைவர்கள்

பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும், மதங்களைக்கொண்ட மலேசியாவில், ஏறத்தாழ 3 கோடியே 27 இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள். கத்தோலிக்கர் நான்கு விழுக்காடு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மலேசியாவில் கொள்ளைநோயை ஒழிக்கும் நடவடிக்கையில், பல்வேறு சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவற்கு உறுதி எடுத்த அந்நாட்டு பல்சமயத் தலைவர்கள், அந்நோய் ஒழிக்கப்பட இறைவனையும் மன்றாடினர்.

1963ம் ஆண்டில் மலேசியா உருவாக்கப்பட்டதன் நினைவாக, செப்டம்பர் 16, இப்புதனன்று 57வது மலேசியா நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, Sarawak மாநிலம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல்சமயத் தலைவர்கள், நல்லிணக்க உணர்வில் தேசிய ஒற்றுமைக்காகச் செயல்பட உறுதி எடுத்தனர்.

57வது மலேசியா நாளை முன்னிட்டு, அந்நாட்டில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியிலிருந்து, செப்டம்பர் 15, இச்செவ்வாய் வரை, ஒவ்வொரு நாளும், பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில், செப நிகழ்வுகளும், கூட்டங்களும் இடம்பெற்றன.

மலேசியாவில், கிறிஸ்தவ, சீக்கிய, இந்து, இஸ்லாம், பாஹாய் போன்ற பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து, பல்வேறு மாநிலங்களில், இத்தகைய நிகழ்வுகளை மேற்கொண்டது, தனித்துவமிக்க ஒன்று என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும், மதங்களைக்கொண்ட மலேசியாவில், ஏறத்தாழ 3 கோடியே 27 இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள். கத்தோலிக்கர் நான்கு விழுக்காடு மட்டுமே. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2020, 14:36