தேடுதல்

எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல 

எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல

இத்தாலிய இயேசு சபை சபையினர், கடந்த நாற்பது ஆண்டுகளாக, உரோம் நகரில் நடத்திவருகின்ற Astalli புலம்பெயர்ந்தோர் மையம், வறியநிலையிலுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோருக்கு, ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வருவதோடு, மற்ற உதவிகளையும் ஆற்றிவருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 27, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 106வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாளை முன்னிட்டு, உரோம் நகரில், இயேசு சபையினரின் Astalli புலம்பெயர்ந்தோர் மையமும், வத்திக்கான் வானொலியும் இணைந்து, “எனது பெயர் புலம்பெயர்ந்தவர் அல்ல” என்ற தலைப்பில், நிகழ்ச்சி ஒன்றை, செப்டம்பர் 26, இச்சனிக்கிழமை மாலையில் ஒலிபரப்புகின்றது.

இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5.05 மணிக்கு ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்தோர், இந்நிலைக்கு தங்களை உள்ளாக்கிய, அரசியல் மற்றும் சமுதாயச்சூழல் உள்ளிட்ட, சொந்தக் கதைகளை விவரிக்கின்றார்கள் என்றும், இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகிர்வின் இறுதியில், "நான் என்னை புலம்பெயர்ந்தவர் என்று அழைப்பதில்லை"  எனக் கூறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் பகிர்வைக் கேட்கின்றபோது, அவர்கள் பற்றிய உண்மையான நிலையையும்,  இவர்கள், வெறும் எண்ணிக்கை அல்ல, மாறாக, தங்களின் சொந்த அனுபவங்களையும், பாச உணர்வுகளையும், அச்சங்களையும், வாழ்வுகுறித்த திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதர் என்று இத்தாலியிலும், மற்ற பகுதிகளும் வாழும் ஏனையோர் அறிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இத்தாலிய இயேசு சபையினர், கடந்த நாற்பது ஆண்டுகளாக, உரோம் நகரில் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தை நடத்தி வருகின்றனர். இந்த மையம், வறியநிலையிலுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருக்கு, ஒவ்வொரு நாளும் உணவு வழங்கி வருவதோடு, ஏனைய உதவிகளையும் ஆற்றிவருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2020, 15:31