தேடுதல்

பாகிஸ்தானில் நிவாரண உதவிகள் பாகிஸ்தானில் நிவாரண உதவிகள் 

பாகிஸ்தானில் பட்டினி கிடக்கும் கிறிஸ்தவர்களுக்கு ACN உதவி

பாகிஸ்தானில் பட்டினி கிடக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்திலிருந்த 2000 கிறிஸ்தவர்களுக்கு, Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு உணவு வழங்கிவருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், பாகிஸ்தானில் பட்டினி கிடக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்திலிருந்த 2000 கிறிஸ்தவர்களுக்கு, Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு உணவு வழங்கிவருகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் பைசலாபாத் நகரில் வாழும் 500க்கும் அதிகமான கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு, அரசின் உதவிகளும், அரசு சாரா அமைப்புக்களின் உதவிகளும் மறுக்கப்பட்ட நிலையில், ACN அமைப்பு, இக்குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறது.

தினக்கூலி தொழிலாளிகள், ரிக்சா ஓட்டுனர்கள், துப்புரவு தொழிலாளிகள் ஆகியோர் அடங்கிய இக்குழுவினருக்கு, பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் துணையுடன், ACN அமைப்பு உணவும், ஏனைய உதவிகளும் வழங்கிவருகிறது என்று ICN செய்தி கூறுகிறது.

மேலும், பைசலாபாத் மறைமாவட்டத்தில் இயங்கிவரும் 20 கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு, ACN அமைப்பு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது.

ACN-COVID என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிதியிலிருந்து, பாகிஸ்தானில் உள்ள 5000த்திற்கும் அதிகமான கிறிஸ்தவ குடும்பங்கள் பயன்பெறுவதாக, ACN அமைப்பு கூறியுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2020, 13:42