ஃபுக்குஷிமா அணுஉலை வெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் ஃபுக்குஷிமா அணுஉலை வெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

ஜப்பான் ஆயர்கள் : உலகில், அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட...

2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உருவாகிய சுனாமி மற்றும், அதைத் தொடர்ந்து, ஃபுக்குஷிமா அணுஉலைகளில் ஏற்பட்ட பேரிடரால், அவ்விடத்திலிருந்து உடனடியாக, 1,54,000 பேருக்குமேல் வெளியேற்றப்பட்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில், அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவேண்டும் என்று, ஜப்பான் ஆயர்கள்  அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜப்பானில் ஃபுக்குஷிமா தாய்ச்சி (Fukushima Daiichi) அணுஉலைகளின் வெடிப்பு ஏற்படுத்திய கடும்விளைவுகள் குறித்த தங்கள் சிந்தனைகளை ஒரு நூலாக வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள், இந்த உலைகள் முன்வைக்கும் பதில்காண முடியாத ஆபத்துகள், குறிப்பாக, சிறாரின் நலவாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளனர்.

“அணுஉலகைள் அழிப்பு: ஜப்பான் கத்தோலிக்கத் திருஅவையிடமிருந்து அழைப்பு” என்ற தலைப்பில் நூல் வெளியிட்டுள்ள ஆயர்கள், அணுசக்தியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாடு, அணுசக்தி ஏற்படுத்தும் அழிவுகள் பற்றிய உண்மைகளை உலகுக்கு அறிவிக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

அணுஉலைகளில் ஒருமுறை விபத்து இடம்பெற்றுவிட்டால், அது, சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை, அடுத்துவரும் தலைமுறைகளும் அனுபவிக்கவேண்டியுள்ளது என்றும், அது, மக்கள் வாழ்வதற்குள்ள உரிமையை அழிக்கின்றது என்றும், ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பானுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, ஃபுக்குஷிமா அணுஉலை வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் சந்தித்தார் என்பதை ஆயர்கள் கூறியுள்ளனர்.

அணுசக்தி நிலையப் பேரிடர், மாபெரும் பேரழிவு என்றும், அது குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் வளர்ச்சிபெறவில்லை என்றும், திருத்தந்தை, ஜப்பானிலிருந்து திரும்பியவேளை, விமானப்பயணத்தில் கூறியதையும், ஆயர்கள் எடுத்துரைத்துள்ளனர். (UCAN)        

2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உருவான சுனாமி மற்றும், அதைத் தொடர்ந்து, ஃபுக்குஷிமா தாய்ச்சி அணுஉலைகளில் ஏற்பட்ட பேரிடரால், அவ்விடத்திலிருந்து உடனடியாக, 1,54,000 பேருக்குமேல் வெளியேற்றப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2020, 13:03