அமெரிக்க கண்டத்தில் குடிபெயர்ந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் அருள்சகோதரிகள் அமெரிக்க கண்டத்தில் குடிபெயர்ந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் அருள்சகோதரிகள்  

61,000 குடும்பங்களுக்கு பசியாற்றும் ஆயர் பேரவை

மெக்சிகோ ஆயர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்கீழ், ஏழை மக்களின் பசி நீக்கப்படுவதோடு, குடும்ப வன்முறைகளுக்கு, உளவியல் ரீதியான தீர்வுகளும் வழங்கப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டில், 'பசியற்ற குடும்பம்' என்ற திட்டத்தின்கீழ், அந்நாட்டு மக்களின் தாராள பொருளுதவியுடன் 61,000 குடும்பங்கள் உதவிபெற்று வருவதாக மெக்சிகோ ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் உருவான, சமூக, மற்றும், பொருளாதார சீர்கேடுகளை சரி செய்யும் நோக்கத்தில், 'பசியற்ற குடும்பம்' என்ற திட்டத்தை ஏப்ரல் மாதம் 23ம் தேதி துவக்கி வைத்த மெக்சிகோ ஆயர்கள், இதனால் தற்போது 61,000 குடும்பங்கள் பசியின்றி வாழ முடிகின்றது என்று கூறியுள்ளனர்.

வலைத்தளம் வழியாக திரட்டப்பட்ட பணத்தைக்கொண்டு, 61,000 குடும்பங்களுக்கு உதவ முடிந்துள்ள நிலையில், மேலும் 68,000 உதவி விண்ணப்பங்கள், காரித்தாஸ் அமைப்பிற்கு வந்துள்ளதாகவும் ஆயர்கள் தெரிவித்தனர்.

இந்த கொரோனா காலத்தில் மெக்சிகோ ஆயர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த உதவித்திட்டத்தின்கீழ், ஏழை மக்களின் பசி நீக்கப்படுவதோடு, குடும்ப வன்முறைகளுக்கு, உளவியல் ரீதியான தீர்வுகளும், பல்வேறு மையங்கள் வழியாக வழங்கப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2020, 13:29