தேடுதல்

Vatican News
இயேசுவின் இறுதி இராவுணவு இயேசுவின் இறுதி இராவுணவு  

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி

பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் திருவழிபாடுகள், இறை வார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருனை வழிபாடு, நற்கருணை இடமாற்று பவனி ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மேரி தெரேசா - வத்திக்கான் &அருள்பணி ஜான் போஸ்கோ, வேலூர் மறைமாவட்டம்

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி

பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி ஆகிய மூன்று நாள்களும் திருஅவையின் வாழ்வில்  மிக முக்கியமானவை. பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் திருவழிபாடுகள்,  இறை வார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருனை வழிபாடு, நற்கருணை இடமாற்று பவனி ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக் கிருமியின் நெருக்கடியால், ஏப்ரல் 09, இந்த வியாழன் திருவழிபாடு சற்று வித்தியாசமான முறையில் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த நாளின் திருவழிபாட்டை கிறிஸ்தவர்கள் அனைவரும் சமுதாய ஊடகங்கள் வழியாகக் காண்கின்றனர். இவ்வாறு, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் வானொலியாக இதில் பங்கேற்க முடியாமலும் பலர் உள்ளனர். இப்போதைய கொள்ளை நோயால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், அவர்களின் குடும்பங்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரை இந்நாளில் சிறப்பாக நினைத்து செபிப்போம். இந்நாள்களில் பசி பட்டினியால், வறுமையால், பல்வேறு நோயால் துன்புறும் மக்களை நினைத்துப் பார்த்து உதவிக்கரம் நீட்டுவோம். தனிமையில் வாடும் வயதானவர்களை, பெற்றோரை இழந்து தவிக்கும் சிறாரை, சரியான திசைகாட்டும் மனிதரின்றி தடம்மாறி வாழ்வைத் தொலைத்துள்ள இளைஞர்களை, மதுவுக்கு அடிமையானவர்களை நினைத்துச் செபிப்போம். நாடுகளின், மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் மக்களை சரியான பாதையில் வழிநடத்த ஆண்டவரை மன்றாடுவோம். அருள்பணித்துவ வாழ்வை ஏற்றுள்ள எல்லாருக்காகவும் செபிப்போம். இயேசுவின் அன்புக்கட்டளையை வாழ்வில் வாழ்ந்து காட்ட, நம் அயலவர் வாழ இறையேசு நமக்கு அருள்புரிவாராக, இப்புனித நாள்களில் இயேசுவின் சிலுவை வேதனைகளைத் தியானித்து அவரின் உயிர்ப்பின் மகிமையில் பங்குபெற நம்மையே தயார் செய்வோம். இந்த புனித வியாழன் சிந்தனையை வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு வழங்குகின்றார், அருள்பணி அருள் ஜான் போஸ்கோ, வேலூர் மறைமாவட்டம்

 

09 April 2020, 10:40