தேடுதல்

Vatican News
இயேசு சிலுவையில் உயிர்விடும் காட்சி இயேசு சிலுவையில் உயிர்விடும் காட்சி 

இணையதளம் வழியே, புனிதவார தியானம்

புனித வாரத்தில், துறவியர், அருள்பணியாளர், பொதுநிலையினர் அனைவரும் கலந்துகொள்ளும் வண்ணம் தியானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர், தெற்கு ஆசிய இயேசு சபையினர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 5ம் தேதி சிறப்பிக்கப்படும் குருத்தோலை ஞாயிறு முதல் துவங்கும் புனித வாரத்தில், துறவியர், அருள்பணியாளர், பொதுநிலையினர் அனைவரும் கலந்துகொள்ளும் வண்ணம் தியானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர், தெற்கு ஆசிய இயேசு சபையினர்.

உலகமனைத்தையும் பாதித்துவரும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தை எதிர்த்துப் போராட, இறைவனின் துணையை வேண்டி, இந்த தியானத்தின் வழியாக, அனைவரும் இணைந்து செபிப்போம் என்று, தெற்கு ஆசிய இயேசு சபைப் பிரிவின் தலைவர், ஜார்ஜ் பட்டேரி அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தியானத்தில் இணையவிரும்புவோர், http://jcsaweb.org/online-retreat-april-2020/ என்ற இணையத்தளத்தின் வழியே பதிவு செய்துகொள்ளலாம் என்றும், இந்த தியானத்தில் துறவறத்தார், அருளப்பணியாளர்கள், இல்லறத்தார் அனைவரும், அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணைந்து கொள்ளலாம் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆசிய இயேசு சபை பிரிவில் பணியாற்றும் 15க்கும் மேற்பட்ட இயேசு சபையினர் வழங்கும் கருத்துக்கள், இத்தியானத்தில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளவர்களின் மின்னஞ்சல் வழியே, ஒவ்வொருநாள் மாலையிலும் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

01 April 2020, 14:11