Christchurchல் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த மசூதிகளில் ஒன்று Christchurchல் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த மசூதிகளில் ஒன்று 

Christchurchல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் முதலாமாண்டு

முஸ்லிம்களோடு மற்றும், முஸ்லிம்களுக்காகச் செபிக்குமாறு, நியுசிலாந்து ஆயர்கள், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நியுசிலாந்து நாட்டின் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் பல்சமய உறவுகள் பணிக்குழு, அனைத்து பங்குத்தளங்களிலும் அமைதிக்காக அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, Christchurchல் இரு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மார்ச் 12, இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்ட அப்பணிக்குழு, நல்லிணக்கம் மற்றும் செபத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.

ஆபிரகாம் மதங்கள் பகிர்ந்துகொள்ளும் ஷாலோம்-அமைதி விழுமியத்தைக் குறிப்பிட்டுள்ள நியுசிலாந்து ஆயர்கள் பணிக்குழு, முஸ்லிம்களோடு மற்றும், முஸ்லிம்களுக்காகச் செபிக்குமாறும் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நியுசிலாந்து கத்தோலிக்கத் திருஅவை, முஸ்லிம் சமுதாயத்துடன் கொண்டிருக்கும் பிணைப்பையும், இவ்வறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது, அப்பணிக்குழு.    

2019ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இரு மசூதிகள் தாக்கப்பட்டதில், குறைந்தது ஐம்பது பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2020, 15:20